’மொத ராத்திரி’ ஆக.21ல். திரையரங்குகளில் வெளியீடு

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் ‘மொத ராத்திரி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு  நிறைவடைந்துள்ளது. ராஜா கருப்பசாமி இயக்கியுள்ள இப்படத்தில் ரிஷிகாந்த் மற்றும் அனிஷ்மா அனில்குமார் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஆகஸ்ட் 21 ஆம்  தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதன் முன்னோட்டக் காட்சி வெள்ளோட்டம் விடப்பட்டது. இந்நிகழ்வில் தயாரிப்பாளர் ரவி சங்கர் பேசும்போது, “ராஜா கதை சொன்னபோதே உடனே எங்களுக்கு பிடித்து விட்டது. ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ போல சின்ன தொகையில் தயாரிக்கப்பட்ட  நல்ல படங்கள் வெற்றியடைந்துள்ளது. அதுபோல, இந்தப் படமும் நல்ல கதைக்களம் கொண்டிருக்கிறது. என்றார். இயக்குநர் ராஜா கருப்பசாமி பேசும்போது “சின்ன பட்ஜெட் படங்கள் தான் தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும். என்னுடைய அனுபவத்திலிருந்து உருவான கதை தான் இந்த படம். என் வாழ்க்கையின் அனைத்து பெண்களுக்கும் இந்த படத்தை சமர்ப்பிக்கிறேன்”.