‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ செப்.4ல் வெளியீடு

சமீபத்தில் மலையாள ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’, தற்போது தமிழ் ரசிகர்களையும் கவர தயாராகியுள்ளது. இப்படத்தின் தமிழ் பதிப்பு காணொளி வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இப்படம் தமிழில் வரும் செப்டம்பர் 4-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. ஒரு நடுத்தர வயது ஆணுக்கும், கல்லூரியில் படிக்கும் இளம்பெண்ணுக்கும் இடையே உருவாகும் காதலின் பல்வேறு முகங்களை மையமாகக் கொண்டு இப்படத்தின் கதை நகர்வதாக காணொளி உணர்த்துகிறது. வயது வித்தியாசம் கொண்ட இருவருக்கிடையேயான ஈர்ப்பு, காதல், அதனால் ஏற்படும் குழப்பங்கள், உணர்வுகள் மற்றும் சமூகத்தைச் சுற்றிய பார்வைகள் என பல அம்சங்களை டிரெய்லர் சுவாரஸ்யமாக முன்வைக்கிறது. இப்படத்தை கிரிஷ் ஏ.டி இயக்கியுள்ளார். அவருடன் இணைந்து கிரண் ஜோசி கதையை எழுதியுள்ளார். திலீஷ் போத்தன், ஃபஹத் பாசில் மற்றும் ஷ்யாம் புஷ்கரன் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். படத்தில் நிவின் பாலி மற்றும் மமிதா பைஜு முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் சங்கீத் பிரதாப், சுரேஷ் கிருஷ்ணா, வினய் ஃபோர்ட், ரோஷன் ஷனவாஸ், ஷ்யாம் மோகன், ஸ்ரீந்தா, பார்வதி அய்யப்பதாஸ், மீனாட்சி ரவீந்திரன், பிந்து பணிக்கர், வெட்டுக்கிளி பிரகாஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.*********

விஷ்ணு விஜய் இசையமைத்துள்ள இப்படத்திற்கு அஜ்மல் சாபு ஒளிப்பதிவு செய்துள்ளார். ஆகாஷ் ஜோசப் வர்கீஸ் படத்தொகுப்பை கவனித்துள்ளார். தொழில்நுட்ப ரீதியாகவும் சிறப்பான கலைஞர்கள் கூட்டணி இப்படத்தில் பணியாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.