வி ஜி சினி புரோடஷ்சன் நா.வெங்கடேசன் தயாரிககும் படம் “விசாரணை கைதி”

“விசாரணை கைதி” திரைப்படத்தை கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் எஸ்.ஆர். மணிகண்டன் கதாநாயகன் உன்னி கிருஷ்ணன் கதாநாயகி வைஷ்ணவி முக்கிய கதாபாத்திரத்தில் கூல் சுரேஷ் இந்தப் படத்திற்கு அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். விகடன் ரித்விகாஸ்ரேயா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். ஒளிப்பதிவாளர் சந்திரன் சாமி. இசை அமைப்பாளர் நரேஷ். சண்டைக் காட்சி இயக்குநர் அசால்ட் மதுர. இப்படம் குறித்து இயக்குநர் கூறியதாவது: இந்த விசாரணை கைதி என்ற ஒரு கதையைக் கொண்டு எத்தனையோ தயாரிப்பாளரை சந்தித்தேன் கடைசியில் என் கதையைக் கேட்டு ரொம்ப நல்லா இருக்கு இந்த கதை என்று சொன்னவர் நா. வெங்கடேசன் தயாரிப்பாளர் உடனே படபிடிப்பு வேலைகளை தொடங்குங்க என்று சொல்லி எனக்கு முன் தொகை கொடுத்தார்.********

தயாரிப்பாளர் நா வெங்கடேசன்: இந்தப் படத்தைப் பற்றி சொல்ல வருவது நான் எத்தனையோ கதைகளை கேட்டேன் அது எனக்கு பிடிக்கவில்லை டைரக்டர் எஸ் ஆர் மணிகண்டன் சொன்ன இந்த கதை எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. இதற்கு என்ன தலைப்பு வைக்கலாம் என்று டைரக்டரிடம் நான் கேட்டேன் இந்த தலைப்பு வைப்பதற்கே கிட்டதட்ட மூன்று மாத காலங்கள் தேவைப்பட்டது அதன் பிறகு தான் இந்த தலைப்பு எங்களுக்குள்ள அமைந்தது அந்த தலைப்புதான் “விசாரணை கைதி”. கதையை கேட்ட உடனே இந்த டைட்டில் பொருத்தமாக எங்களுக்கு இது அமைஞ்சது மற்றும் இந்த படம் நல்ல அருமையா வந்திருக்கு. இயக்குநர்
என்னிடம் கதை சொன்னபடியே இந்த படம் எடுத்துக் கொடுத்திருக்கிறார்