மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் துருவ் விக்ரம் நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘ஜாக்கி – நோ ரீடேக்ஸ் அலவுட்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. கரண் அரவிந்த் குமார் இயக்கும் இப்படத்தின் பதாகையை படக்குழு வெளியிட்டுள்ளது. மைத்ரி மூவி மேக்கர்ஸ், தமிழ் சினிமாவில் தனது நான்காவது படைப்பாக இப்படத்தை தயாரிக்கிறது. நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில், மாறுபட்ட கதாபாத்திரங்களிலும் அழுத்தமான நடிப்பிலும் கவனம் ஈர்த்து வரும் துருவ் விக்ரம், முதல் முறையாக ரசிகர்களை அதிக அளவில் கவரும் வகையிலான கமர்ஷியல் கதைக்களத்தில் நடிக்கவுள்ளார்..******
படத்தின் தலைப்புடன் வெளியான பதாகையில் துருவ் விக்ரம் இதுவரை இல்லாத வகையில் நல்ல தோற்றத்தில் காட்சியளிக்கிறார். நேரடி ஆக்ஷன் காட்சிகளின் தன்மையுடன் காமிக் புக் பாணியிலான காட்சியமைப்பும் இணைந்திருக்கும் இந்த போஸ்டர், படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

