பா.இரஞ்சித் இயக்கும் புதிய திரைப்படம் “வேட்டுவம்”.

பா.இரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘வேட்டுவம்’ திரைப்படத்தை லெர்ன் அண்ட் டெக் புரடெக்‌ஷன் நிறுவனத்துடன் இணைந்து பா.இரஞ்சித்தின் நீல்ம் புரடெக்‌ஷன் தயாரித்துள்ளது. இப்படத்தின் உலகத்தை அறிமுகப்படுத்தும் “வேர்ட் ஆப் வேட்டுவம்” காணொளி வெளியாகியுள்ளது.

இக்காணொளி தமிழ் மட்டுமின்றி இந்தி, தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளிலும் வெளியாகியுள்ளது. தமிழ் பதிப்பிற்கு இயக்குநர் பா.இரஞ்சித் குரல் கொடுத்துள்ளார். படத்தில் இடம்பெறும் அதிரடி காட்சிகள் அடிமுறை மற்றும் மால்கம் உள்ளிட்ட பாரம்பரிய தற்காப்புக் கலைகளின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதற்காக படத்தில் நடித்துள்ள அனைத்து நடிகர்களும் முறையான தற்காப்புக் கலைப் பயிற்சியைப் பெற்றுள்ளனர்.

இதன் மூலம் அதிரடி காட்சிகளுக்கு இயல்பான தன்மையையும், வித்தியாசமான திரை அனுபவத்தையும் உருவாக்கியுள்ளனர். ஆர்யா, தினேஷ், ஷபீர், சோபிதா துலிபாலா, கலையரசன் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடித்துள்ள இப்படம், பிரம்மாண்டமான  அதிரடியான ஆக்ஷன் மற்றும் கமர்ஷியல் அம்சங்களுடன் உருவாகியுள்ளது.*********

இப்படத்தின் தொழில்நுட்பக் குழுவில் கலை இயக்குநர் S.S. மூர்த்தி, ஒளிப்பதிவாளர் ரூபேஷ் ஷாஜி, படத்தொகுப்பாளர் செல்வா R.K., இசையமைப்பாளர் G.V. பிரகாஷ் குமார் மற்றும் ஸ்டண்ட் இயக்குநர் திலீப் சுப்பராயன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். திரைக்கதையை  எழுத்தாளர் சந்தோஷ் நாராயணன் இணைந்து எழுதியுள்ளார். வசனம் –  ப்ராங்ளின்.