கேசவமூர்த்தி தயாரிப்பில் தம்பிதுரை இயக்கத்தில் சித்து மூலிமணி, சந்தோஷ், ஸ்ரீ வைஷ்ணவ், கிருஷ்ணா விஜய், பாலாஜி, ஸ்ரீகாந்த், அமிதா ரங்கநாதா, நிஷா ஹெக்டே, மேரி லிட்டி, கீர்த்தனா புல்கி ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “கோல்ட் கால்”. பெங்களூரில் ஒரு நிறுவனத்தில் சித்து மூலிமணி, சந்தோஷ், ஸ்ரீவைஷ்ணவ் கிருஷ்ணா, விஜய் பாலாஜி ஸ்ரீகாந்த் ஆகியோர் நண்பர்களாக இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் அந்த நிறுவனத்தில் விற்பனை முகவர்களாக வேலை பார்க்கிறார்கள். அந்த நிறுவனத்துக்கு வேலை செய்யாமல் ஜாலியாக ஊர்சுற்றிக் கொண்டு சமாளிக்கிறார்கள். இதை அறிந்த நிறுவனம் அவர்களை வேலையிலிருந்து நீக்கிவிடுகிறது. அதே நேரத்தில் ஒரு கடத்தல் சம்பவத்தில் நண்பர்கள் நால்வரும் சிக்கிக் கொள்ள அதிலிருந்து அவர்கள் தப்பித்தார்களா? இல்லையா? என்பதுதான் கதை.
அதுரடி களத்தில் நகைச்சுவையையும் கலந்து சுவாரசியமாக நகர்த்தியிருக்கிறார் இயக்குநர் தம்பிதுரை. சித்து மூலிமணி, சந்தோஷ், ஸ்ரீ வைஷ்ணவ், கிருஷ்ணா, விஜய், பாலாஜி ஸ்ரீகாந்த் ஆகியோரின் இயல்பான நகைச்சுவை கலந்த நடிப்பு ரசிக்க வைக்கிறது. நிஷா ஹெக்டே, மேரி லிட்டி, அமிதா ரங்கநாதா,கீர்த்தனா புல்கி ஆகியோரின் நடிப்பு படத்தின் விறுவிறுப்புக்கு துணை செய்திருக்கிறது. சரவணனின் ஒளிப்பதிவும் பிரணவ் கிரிதரனின் இசையும் திரைக்கதைக்கு காதலர்களாக மாறியிருக்கிறது. வேலை செய்யாமல் சமாளிப்பவர்களின் நிலை என்னவாகும் என்பதை திரையில் நகைச்சுவையுடன் பாடம் நடத்தியிருக்கிறார் இயக்குநர் தம்பிதுரை.

