“ஆல் பாஸ்” திரைப்படம் அக்.9ல் திரையரங்கில் வெளியாகிறது

மைதீன் இயக்கத்தில் உருவாகியுள்ள “ஆல் பாஸ்” அக்டோபர் 9- ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. ஒன்ஸ் ஸ்டெப் என்டர்டெயின்மெண்ட் என்ற தயாரிப்பு நிறுவனம் சார்பில் மோகனா .ஆர் தயாரித்துள்ள படம் “ஆல் பாஸ் ” இப்படத்தில் துஷ்யந்த் கதாநாயகனாக நடித்துள்ளார். ஜனனி கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் ஜெயப்பிரகாஷ், செந்திகுமாரி, இயக்குநர் சுப்பிரமணிய சிவா, வினோதினி, பிரசன்ன பாலச்சந்திரன், மோகனா,ஆர், சத்யா மற்றும் சஞ்சய், கோகுல், நிகில் மூவரும் பெயர் சொல்லும் பாத்திரங்களை ஏற்றுள்ளனர். சரத் லோகித்ஷவா இந்தப் படத்தின் வில்லனாக நடிக்கிறார். மேலும் ரோஷன் பஷீர், அருவி மதன் இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இயக்குநர் மூர்த்தி , கலையரசன் கண்ணுசாமி ஆகியோர் நகைச்சுவைப் பாத்திரங்களில் வருகிறார்கள்.*******

‘கலகத் தலைவன்’, ‘அண்ணாதுரை’ , ‘தகராறு’ போன்ற படங்களின் ஒளிப்பதிவாளர் தில்ராஜு இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். ‘சுப்ரமணியபுரம்’ படத்தின் மூலம் பட்டி தொட்டியெங்கும் பிரபலமான இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார் .

பாடல்களை மோகன் ராஜன், நிலவை பார்த்திபன், ஜேம்ஸ் வசந்தன் ஆகியோர் எழுதியுள்ளனர்.’பசங்க’ படத்தின் படத்தொகுப்பாளர் எஸ்.பாஸ்கர் இந்தப் படத்திற்கும் எடிட்டிங் செய்துள்ளார். கலை இயக்குநராக ஜெயசீலன்.T பணியாற்றியுள்ளார்.

பிரபல நடன இயக்குநர் I.ராதிகா நடனம் அமைத்துள்ளார்.
சண்டைக் காட்சிகளை மெட்ரோ மகேஷ் மேற்கொண்டார்.
ஒப்பனை – எல்.வி.ராஜா, உடைகள் – ஏ.எஸ்..வாசன்,
ஸ்டில்ஸ – அண்ணாதுரை, விளம்பர வடிவமைப்பு – கிப்சன் UGA, மக்கள் தொடர்பு – புவன் செல்வராஜ்,
தயாரிப்பு – மோகனா. ஆர்.