நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 98வது பிறந்த நாள்

தமிழ் திரையுலகில் அடையாளமாக காலந்தோறும் போற்றப்படும் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவருமான மறைந்த நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசன் அவர்களின் 98-வது பிறந்த நாளை முன்னிட்டு, தலைவர் நாசர் அவர்கள் நடிகர் திலகம் செவாலியே சிவாஜிகணேசன் அவர்களின் மணிமண்டபத்திற்கு நேரில் சென்று மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, நடிகர் சங்க வளாகத்தில் அவரது திருவுருவ படத்துக்கு துணைத் தலைவர் பூச்சி எஸ் முருகன், செயற்குழு உறுப்பினர்கள் நடிகை லதா சேதுபதி, தளபதி திணேஷ், ஹேமச்சந்திரன், நடிகர் கிளி ராமச்சந்திரன், மற்றும் நடிகர் சங்க மேலாளர் தாமராஜ் உள்ளிட்டோர் மலரஞ்சலியும் மரியாதையும் செலுத்தினார்.