கலாநிதி மாறன் தயாரிப்பில், நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த், எஸ்.ஏ.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, மிதுன் சக்ரவர்த்தி, வித்யா பாலன், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு. நமோ நாராயணா, பி.எல்.தேனப்பன், ஜாபர் சாதிக், பகவதி பெருமாள் கோட்டயம் நசீர், சுனில் சுகதா, ஹக்கீம் ஷாஜஹான் வினீத் தட்டில் டேவிட், ராமச்சந்திரன் துரைராஜ் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “ஜெயிலர் 2”. ஜெயிலர் முதல் பாகத்தின் இறுதிக்கட்ட காட்சியில் விநாயகத்தை வீழ்த்திய ரஜினிலாந்திடம் “எனக்குப் பின்னால் ஒரு மிகப் பெரிய கொலை கொள்ளைக்கூட்டதின் தலைமை இருக்கிறது. அதிலிருந்து நீ தப்ப முடியாது” என்று விநாயகம் சொல்லி இறந்து விடுகிறார். அந்த கொள்ளைக்கூட்ட தலைமையிடம் எது? அதன் தலைவர் யார்?. என்பதை ரஜினிகாந்த் கண்டுபிடித்து அழித்தாரா? இல்லையா? என்பதை சொல்வதுதான் ஜெயலர் 2ஆம் பாகம். கோவையிலுள்ள ஒரு பலபொருள் விற்பனை அங்காடியில் மேற்பார்வையாளாராக வேலை பார்க்கிறார் ரஜினிகாந்த். கோவாவிலொருந்து கொண்டு உலகளவில் சிலை கடத்தல் தொழிலை செய்து வருகிறார் எஸ்.ஏ.சூர்யா. எஸ்.ஏ.சூரியாவால் கடத்தப்பட்ட பல லட்சம் கோடி ரூபாய் மதிபுள்ள பழங்காலத்து சாமி சிலைகள் உள்ள மூன்று கண்டெய்ணர் லோரிகளை ரஜினிகாந்த் கைப்பற்றி மறைத்து வைத்திருக்கிறார். அந்த சிலைகளை எஸ்.ஏ.சூர்யா மீட்டெடுத்தாரா? இல்லையா? என்பதுதான் மீதிக்கதை. இப்படத்தில் ரஜினிகாந்த் அமைதியாகவும், நின்ற இடத்தில் நின்று கொண்டே அலட்டிக் கொள்ளாமல், கண் அசைவு சைகை மூலமும், துண்டு துண்டாக பேசும் வசனங்களாலும் படத்தின் கதையை நிறைவு செய்து நடித்திருக்கிறார் ரஜினிகாந்த். அவரை தோளில் சுமந்திருப்பது அனிரூத்தின் பின்னணி இசைதான். 76 வயதிலும் முதுகு தண்டு வளையாமல் கம்பீரத்த்குடன் நிமிர்ந்து நின்று நடித்திருக்கும் அவரது சாயல், அவரது ரசிகர்களை கைத்தட்டவும் விசிலடிக்கவும் வைத்திருக்கிறது. இப்படத்தை தொய்வில்லாமல் காப்பாற்றியது நமோ நாராயனனின் நகைச்சுவை காட்சிகள்தான். சுராஜ் வெஞ்சரமூடுவுடன் நமோ நாராயணா விளையாடிய செஸ் பலகை விளையாட்டு நகைச்சுவை திரை அரங்கை சிரிபொலியால் அதிர வைக்கிறது. இனிப்பை கொடுத்தே கொல்லும் வில்லத்தனத்தன படிப்பில் மென்மேலும் பரிணாம வளர்ச்சி பெற்றிருக்கிறார் எஸ்.ஏ.சூர்யா. ரித்திக் ரோஷனின் அடியாட்களாக வரும் நான்கு இளம் பெண்கள், எஸ்.ஏ.சூர்யாவின் அடியாட்களுடன் சண்டையிடும் காட்சியை மெய்சிலிர்க்க வைத்திருக்கிறார் சண்டை இயக்குநர். படத்தின் இடைவேழ்லைக்கு முன்பும் பின்பும் சலிப்பத்தட்டாமல் படத்தை பார்த்து ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குநர் நெல்சன்.
ஜெயலர் 2 திரைப்பட விமர்சனம்
