ழகரம் ஸ்டுடியோஸ் மற்றும் 2 டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் ஜோதிகா – சூர்யா தயாரிப்பில் இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் தயாராகி இருக்கும் ‘சீன்’ திரைப்படத்தினை விளம்பரப்படுத்தும் முதல் பிரத்யேக நிகழ்வு துபாயில் உள்ள வணிக வளாகத்தில் நடைபெற்றது. சூர்யா, நஸ்ரியா நஜீம், நஸ்லென், ஆனந்தராஜ், லால், ராஜ் பிரியன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் ‘சீன்’ படத்தை இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கியிருக்க, வினீத் அகஸ்டியன் ஒளிப்பதிவு செய்ய, சுஷின் ஷ்யாம் இசையமைந்திருக்கிறார். ஜெயஸ்ரீ தாமோதரன் இணை தயாரிப்பாளராக பணியாற்றி, பொழுதுபோக்கு திரைப்படமாக தயாராகி இருக்கும் இந்த திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு எதிர்வரும் நவம்பர் மாதம் ஆறாம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. ‘சீன்’ படத்தை ரசிகர்களுக்கு சென்றடையும் வகையில் விளம்பரப்படுத்தும் பணிகளை தொடங்கி இருக்கும் படக்குழு. இதன் முதல் நிகழ்வு ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் உள்ள பிரபலமான வணிக வளாகத்தில் பிரத்யேகமாக நடைபெற்றது. இந்நிகழ்வில் நடிகர்கள் சூர்யா, நஸ்லென், நடிகை நஸ்ரியா நஜீம், இயக்குநர் ஜித்து மாதவன், இணை தயாரிப்பாளர் ஜெயஸ்ரீ தாமோதரன்- ராஜசேகர் பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.*******
இந்நிகழ்வில் நடிகர் சூர்யா பேசுகையில், “நான் திரையுலகில் அறிமுகமாகி 28 ஆண்டுகளில், 48 திரைப்படங்களை நிறைவு செய்திருக்கிறேன். ஆனால் இந்த ‘சீன்’ திரைப்பட பயணம் மிகவும் புத்துணர்ச்சியானது. தீபாவளியன்று…. உங்களுக்கு எல்லாம் எப்படி ‘கருப்பு’ திரைப்படம் பிடித்ததோ.. ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படம் பிடித்ததோ… அதேபோல் ‘சீன்’ திரைப்படமும் பிடிக்கும். இந்த திரைப்படம் ஃபிரஷ்ஷான படைப்பாக இருக்கும். இதை நீங்கள் கிரைம் திரில்லர் என்றும் சொல்லலாம். மர்டர் மிஸ்டரி என்றும் சொல்லலாம். ஆனால் இந்த திரைப்படம் ஃபேமிலி என்டர்டெய்னராகவும் இருக்கும். நான் இதுவரை மலையாளத்தில் நேரடியாக நடிக்கவில்லை. இருப்பினும் அங்கிருந்து தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் நடிகர்களுடன் இணைந்து ஒரு தமிழ் படத்தில் நடித்திருக்கிறேன். அதனால் இந்த படம் கேரள மக்களுக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன். எனவே தீபாவளி திருநாளை முன்னிட்டு நவம்பர் 6ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் படத்தை பார்த்து ரசிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

