52 கிலோ கஞ்சா வழக்கில் குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை – ரூ.1 லட்சம் அபராதம் – காவல்த்துறை தலைவர் தகவல்

கடந்த 14.10.2015 அன்று, போதைப்பொருள் நுண்ணறிவுப் பிரிவு  தனிப்படையினர் திண்டுக்கல் – திருச்சி சாலை, வடமதுரை சந்திப்பு பகுதியில் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சட்ட விரோதமாகக் கடத்தி வரப்பட்ட 52 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, கடத்தலில் ஈடுபட்ட முதன்மை குற்றவாளியான கம்பத்தைச் சேர்ந்த சமாதானபிரபு கைது செய்யப்பட்டார் காவல்துறையினர் அறிவியல் பூர்வமான மற்றும் மறுக்க முடியாதசாட்சியங்களைச் சேகரித்து, மதுரை சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல்செய்தனர். வழக்கு விசாரணையின் முடிவில், குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றிநிரூபிக்கப்பட்டதால்,  நீதிபதி  28.10.2026 அன்று வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கினார். அதில் குற்றவாளி சமாதானபிரபுவிற்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைதண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் படைத்தலைவர் முனைவர் மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப., இவ்வழக்கில் குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத் தந்த விசாரணை அதிகாரிகளை பாராட்டினார்

-தங்க முகையதீன்-