அஜய் கார்த்தி – தீபா பாலு நடிக்கும் “ஸ்டேஷன்“

அஜய் கார்த்தி, தீபா பாலு இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம் ‘ஸ்டேஷன்’. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. கேபி இன்போடெயின்மென்ட் தயாரிப்பில், உருவாகும் இப்படம் காதல், குற்றம், அதிரடி என மூன்றும் கலந்த  திரைப்படமாக உருவாகி வருகிறது. ஒரே இரவில் நடைபெறும் வித்தியாசமான கதைக்களத்தை மையமாகக் கொண்டு இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. சென்னையின் முக்கியப் பகுதிகளில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மாறன் கார்த்திகேயன் இயக்கும் இப்படத்தை கேபி இன்போடெயின்மென்ட் சார்பில் கே. தினேஷ் குமார் தயாரிக்கிறார். குற்றப் பின்னணி,  மற்றும் காதல் உணர்வுகள் எனப் பல சுவாரசியமான அம்சங்களுடன் இப்படம் உருவாகிறது.  இப்படத்தில் அஜய் கார்த்திக்கு ஜோடியாக தீபா பாலு துடிப்பான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவர்களுடன் பிரபல இயக்குநரும் நடிகருமான ஏ.வெங்கடேஷ், தினேஷ் பிரபாகர், பாலஹாசன், ரமேஷ் திலக், மூணார் ரமேஷ், ஜெய் கிருஷ்ணா, வாழை ஜானகி, மெட்ராஸ் ரமா, அனு ஸ்ரீ வேலன், பிரகாஷ், சோபியா மற்றும் சப்பாணி பாய்ஸ் முரளி உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.*********

படத்தின் மொத்தக் காட்சிகளில் சுமார் 70 சதவீதம் காவல் நிலையத்தை மையமாகக் கொண்டே அமைந்துள்ளன. இதற்காக, சென்னையில் உள்ள பிரபல திரைப்படத் தொழில்நுட்பக் கல்லூரியில் பிரம்மாண்டமான காவல் நிலைய அரங்கம் அமைக்கப்பட்டு, படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. காட்சிகள் இயல்பாகவும் நம்பகத்தன்மையுடனும் அமைய வேண்டும் என்பதற்காக இந்த அரங்கம் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. வலுவான தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்களிப்புடன் காட்சியமைப்பிலும், தொழில்நுட்பத்திலும் சிறந்த திரை அனுபவத்தை வழங்கும் நோக்கில் ‘STATION – Hunt For Survival’ திரைப்படம் உருவாகி வருகிறது.

படக்குழுவினர்:  எழுத்து & இயக்கம்: மாறன் கார்த்திகேயன்  தயாரிப்பு: கே. தினேஷ் குமார் ஒளிப்பதிவு: சுபாஸ் பாரதி இசை: அருண் ராஜ் கலை இயக்கம்: அய்யப்பன் S சண்டைப் பயிற்சி: பிரபு ஜாக்கி ஆடை வடிவமைப்பு: தினேஷ் பாபு G  படத்தொகுப்பு: முத்தையன் U நிர்வாகத் தயாரிப்பு: விக்கி ஆண்ட்ரு VFX மேற்பார்வை: சரவண பாலாஜி K – Time Stone FX மார்க்கெட்டிங்: Digitally Powerful மக்கள் தொடர்பு: சதீஷ் குமார் – S2 Media புதிய கோணங்களிலும் வித்தியாசமான கதைக்களங்களிலும் திரைப்படங்களை உருவாக்கும் நோக்கத்துடன் செயல்பட்டு வரும் KP INFOTAINMENT நிறுவனம், ‘STATION – Hunt For Survival’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தனது பயணத்தைத் தொடர்கிறது.

தற்போது படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், காதல், குற்றம், சஸ்பென்ஸ் மற்றும் அதிரடி எனப் பல பொழுதுபோக்கு அம்சங்களுடன் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும் திரைப்படமாக ‘STATION – Hunt For Survival’ உருவாகி வருகிறது.