மக்களை தேடி மருத்துவம் திட்டம் மூலம் நேற்று வரை 1,15,785 பயனாளிகள் பயனடைந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது

ஒரு கோடி மக்களுக்கு வீடு தேடி மாத்திரை மருந்துகள் வழங்கும் “மக்களை தேடி மருத்துவம்” எனும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி கிருஷ்ணகிரியில் துவக்கி வைத்தார்.தமிழகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் மக்களை …

மக்களை தேடி மருத்துவம் திட்டம் மூலம் நேற்று வரை 1,15,785 பயனாளிகள் பயனடைந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது Read More

அதிமுக பிரமுகர் வீட்டில் நடத்திய சோதனையில் 11.80 லட்ச பணம் மற்றும் ஏராளமான ஆவணங்களும் பறிமுதல்.

முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி சொந்தமான 60க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடியாக சோதனை நடத்தினர். குறிப்பாக சென்னை மாநகராட்சி மற்றும் கோவை முனிசிபல் கார்ப்பரேஷன் ஆகியவற்றில் 811 கோடி ரூபாய் டெண்டர் முறைகேட்டில் ஈடுபட்டதாக லஞ்ச …

அதிமுக பிரமுகர் வீட்டில் நடத்திய சோதனையில் 11.80 லட்ச பணம் மற்றும் ஏராளமான ஆவணங்களும் பறிமுதல். Read More

ஆட்சிக்கு வந்து 100 நாட்களாகியும் வாக்குறுதியை நிறைவேற்றாதது ஏன் என்கிறார்கள் அரசு மருத்துவர்கள்

2019 ம் ஆண்டு ஊதிய உயர்வுக்காக போராடிய அரசு மருத்துவர்களுக்கு அளித்த வாக்குறுதியை, ஆட்சிக்கு வந்து 100 நாட்களாகியும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் நிறைவேற்ற மறுப்பது ஏன் என்று அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்ட குழு கேள்வி எழுப்பியுள்ளது*. ஊதிய உயர்வில் …

ஆட்சிக்கு வந்து 100 நாட்களாகியும் வாக்குறுதியை நிறைவேற்றாதது ஏன் என்கிறார்கள் அரசு மருத்துவர்கள் Read More

கோவையில் கலப்பட டீசல் லாரி பறிமுதல்

கோயம்புத்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளான சேலம், சங்ககிரி, நாமக்கல், திருசெங்கோடு, பொள்ளாச்சி ஆகிய பகுதிகளில்கலப்பட டீசல் விற்பனை செய்யப்படுவதாகக் கிடைத்த தகவலின்பேரில் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறைகாவல்துறை கூடுதல் இயக்குநர், திரு.ஆபாஸ்குமார், இ.கா.ப.,அவர்களின் உத்தரவுப்படி, காவல் கண்காணிப்பாளர்கள்திரு.ஸ்டாலின், திரு.பாஸ்கர் அவர்களின் நேரடி மேற்பார்வையில்காவல் துணைக் கண்காணிப்பாளர்கள் மற்றும் ஆய்வாளர்கள்தலைமையில் பல குழுக்களாகப் பிரிந்து மேற்படி பகுதிகளில்கலப்பட டீசல் வாகன சோதனை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது.  கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் கலப்பட டீசல் சம்பந்தமாகமொத்தம் 07 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அதில் 26400 லிட்டர்கலப்பட டீசல் பறிமுதல் செய்யப்பட்டு அந்த டீசல் ஏற்றி வந்த 05 டேங்கர் லாரிகள் மற்றும் 03-Tata Ace வாகனங்கள் பறிமுதல்செய்யப்பட்டுள்ளன. மேலும் கடத்தல் செயலில் ஈடுபட்ட 10 நபர்கள்கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். அதில் தொடர்ந்து குற்றச் செயலில் ஈடுபடும் நபர்கள் மீது கள்ளசந்தை தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் தடுப்பு காவலில் வைக்கநடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  இதில் 13.08.21ஆம் தேதி சேலம் மாவட்டம் சங்ககிரி குப்பனூர்பிரிவு சாலையில் வாகன தணிக்கையின் போது அதிகாலை சுமார்03.00 மணியளவில் கோவையிலிருந்து சேலம் நோக்கி வந்த TN-49-AM 9978 என்ற எண்ணுள்ள டேங்கர் லாரியில் சுமார் 4000 லிட்டர்அளவுள்ள கலப்பட டீசல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது, ஓட்டுநர்மதியழகன் (47) த.பெ. ராஜு மற்றும் க்ளினர் செல்வம் (26) த.பெ.சமுத்திரம் மற்றும் உரிமையாளர் இன்பராஜ் திருப்பூர் ஆகியோர்கள்கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பிவைக்கப்பட்டது.  ​அதேபோல் பொள்ளாச்சி கே.ஜி. சாவடி எட்டிமடை கே.பி.எஸ்குடோன் அருகில் 12.08.21 ம் தேதி வாகனத் தணிக்கையில் 4000 லிட்டர் ஏற்றி வந்த லாரி TN 88 F 8767 மற்றும் TN 38 U 3594 என்றTATA ACE வாகனங்களை ஓட்டி வந்த ஓட்டுனர்கள் சபாபதி மற்றும்செல்வ கருப்பையா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும்சேலம் கேது நாயக்கபன்பட்டியில் கடந்த 05.08.21 ம் தேதி வாகனத்தணிக்கையில் 1350 லிட்டர் ஏற்றி வந்த லாரி TN 39 CD 2323 மற்றும்Steel barrel பறிமுதல் செய்யப்பட்டு வெங்கடேசன் கைதுசெய்யப்பட்டுள்ளார். அதேபோல் சேலம் சங்ககிரி முதல் எடப்பாடி ரோடு வாரிபேக்கரி முன்பு 06.08.21 ம் தேதி வாகனத் தணிக்கையில் 17050 லிட்டர் ஏற்றி வந்த லாரிகள் TN 34 L 0378, KA 01 AE 7577 மற்றும்TN 29 BD 1393 என்ற TATA ACE வாகன ஓட்டுனர்கள் கலப்பட டீசல்உரிமையாளர்களான ஆரோக்கியராஜ், கவுதம், சங்கர் மற்றும்பழனிசாமி ஆகியோர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் நாமக்கல்தொட்டிப்பட்டியில் 25.06.21 ம் தேதி 7000 லிட்டர் கலப்பட டீசலைஏற்றி வந்த லாரி TN 18 S …

கோவையில் கலப்பட டீசல் லாரி பறிமுதல் Read More

விண்ஸ்டார் விஜய் நடிக்கும் “தர்மத்தின் தலைவன்“

இருவேடங்களில் விண்ஸ்டார் விஜய் நடிக்கும் “தர்மத்தின் தலைவன் “ படத்தின் பூஜை AVM ஸ்டுடியோவில் ( 10.09.2021 ) அன்று .வெகு விமர்சியாக நடைப்பெற இருக்கிறது. “தர்மத்தின் தலைவன் “ கதைக்கரு இலவச கல்வி கொடுக்க போராடும் கதாநாயகன் (அப்பா) இதைப் …

விண்ஸ்டார் விஜய் நடிக்கும் “தர்மத்தின் தலைவன்“ Read More

ஆப்கானிஸ்தானின் தற்போதைய நிலை

ஆப்கானிஸ்தான் நாடாளுமன்றத்தையும் கைப்பற்றியது தாலிபன் அமைப்பு. சுமார் 1,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்திய அரசால் கட்டப்பட்ட இந்த நாடாளுமன்ற கட்டிடத்தை சில ஆண்டுகளுக்கு முன்பாக பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது!* ஆப்கானிஸ்தானுக்கான ரஷ்ய தூதர் நாளை …

ஆப்கானிஸ்தானின் தற்போதைய நிலை Read More

உள்ளுறுப்பு லீஸ்மேனியாசிஸ் சிகிச்சை திறனை அதிகரிக்க எளிதான, வாய்வழி உயிரி மருந்தை இந்திய ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பிடித்தனர்

உள்ளுறுப்பு லீஸ்மேனியாசிஸ் என்ற வெப்ப மண்டல ஒட்டுண்ணி நோய்க்கு 90 சதவீதம் சிறப்பான சிகிச்சையளிக்கும்,  எளிதான, விலை குறைவான, வைட்டமின் பி12, பூசப்பட்ட மிகச் சிறிய ரக வாய்வழி உயிரி மருந்தை  இந்திய ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர். மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத்துறையின், தன்னாட்சி அமைப்பான நானோ அறிவியல் தொழில்நுட்ப மையத்தின் (INST) டாக்டர் …

உள்ளுறுப்பு லீஸ்மேனியாசிஸ் சிகிச்சை திறனை அதிகரிக்க எளிதான, வாய்வழி உயிரி மருந்தை இந்திய ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பிடித்தனர் Read More

விவசாயக் கடன் மற்றும் நகைக் கடன்கள் குறித்தவிவாதத்தின்போது, முதலமைச்சர் ஸ்டாலின் அளித்த பதில்

முதல்வர்: மாண்புமிகுபேரவைத் தலைவர் அவர்களே, முன்னாள் அமைச்சர் மாண்புமிகு உறுப்பினர் திரு. உதயகுமார் அவர்கள், இங்கே பல கருத்துகளை எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள்.  அவற்றிற்குரிய விளக்கங்களை நம்முடைய அமைச்சர் பெருமக்கள் இங்கே தந்திருக்கிறார்கள்.  எனவே, நான் அதிகம் விளக்கம் சொல்ல விரும்பவில்லை.  ஒரே வரியிலே சொல்ல வேண்டுமென்றால், வெள்ளை அறிக்கை …

விவசாயக் கடன் மற்றும் நகைக் கடன்கள் குறித்தவிவாதத்தின்போது, முதலமைச்சர் ஸ்டாலின் அளித்த பதில் Read More

தமிழ்நாட்டில் இருந்து அதிகம் அறியப்படாதசுதந்திரப் போராட்ட வீரர்கள்நினைவு கூறப்பட்டனர்

இந்தியாவின் 75வது சுதந்திரத்தை கொண்டாடும்வகையில், ‘சுதந்திர போராட்டத்தின் போற்றப்படாதநாயகர்கள்’ என்ற தலைப்பிலான இணையகருத்தரங்கை, மத்திய அரசின் தகவல் மற்றும்ஒலிபரப்புத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும்சென்னையில் உள்ள மண்டல மக்கள் தொடர்பு துறைஅலுவலகம், பத்திரிகை தகவல் அலுவலகத்துடன்இணைந்து நடத்தியது.  சுதந்திர போராட்ட இயக்கத்தின் போற்றப்படாதநாயகர்களை வாழ்த்தி பேசிய, சென்னை கிறிஸ்த்துவகல்லூரியின், வரலாற்றுத்துறை உதவி போராசிரியர்டாக்டர் மரிலின் கிரேஸி அகஸ்ட்டின், சுப்பிரமணிய சிவா, டி.எம்.கலையண்ணன், யகுன் ஹாசன் சயீத் மற்றும்லட்சுமி சாகல் போன்ற தலைவர்கள் குறித்து பேசினார். சுத்த தமிழ் இயக்கத்தின் தீவிர ஆதரவாளரான, திருசுப்பிரமணிய சிவா, தனி தமிழ் இயக்கத்தைதோற்றுவித்து, அதை தனது மாத இதழ் ஞானபானு மூலம்பிரபலப்படுத்தினார்.  அவர் வஉசி மற்றும் பாரதிஆகியோருடன் இணைந்து பணியாற்றினார்.  திலகரின்கொள்கைகளை பின்பற்றி, ஆங்கிலேயர்களைவன்மையாக எதிர்க்க இளைஞர்களை சுப்பிரமணிய சிவாஊக்குவித்தார். சென்னை சிறையில் முதல் அரசியல்கைதியாக இருந்த சுப்பிரமணிய சிவா, சிறையில் தோல்தொழிற் சாலையில் சுகாதாரமற்ற சூழ்நிலையில்பணியாற்றியதால், கடுமையான தொழுநோய்க்குஆளானார். இது பரவும் என பயந்து, சேலம் சிறைக்குவெறும் காலுடன் நடந்து செல்லும்படி சுப்பிரமணிய சிவாவற்புறுத்தப்பட்டார். இதனால் அவரது உடல்நிலைமேலும் மோசம் அடைந்தது. திரு கலையண்ணன் பற்றிபேசிய டாக்டர் மர்லின், காந்தியவாதியானகலையண்ணன், இந்திய தேசிய காங்கிரஸில் தனது 19ம்வயதில் இணைந்தார் என கூறினார். வெள்ளையனேவெளியேறு இயக்கத்தில் பங்கு பெற்ற அவர், கடந்த1949ம் ஆண்டு சட்டசபையில் இளம் உறுப்பினர் ஆனார். அவர் 3 முறை சட்டசபை உறுப்பினராக இருந்தார். சேலம் பகுதியில், அவர் சுமார் 1000 பள்ளிகளைதொடங்கினார் மற்றும் நலத்திட்ட பணிகளில் தீவிரமாகஈடுபட்டார்.  யகூப் ஹாசன் சயீத் பற்றி கூறுகையில், அவர் நாக்பூரில் பிறந்து சென்னைக்கு 1901ம் ஆண்டுவந்தார் என டாக்டர் மர்லின் கூறினார். முஸ்லிம் லீக்அமைப்பை ஏற்படுத்திய நிறுவனர்களில் அவரும் ஒருவர். தொழிலதிபரான இவர், இந்திய தேசிய காங்கிரஸில்1916ம் ஆண்டு இணைந்தார். பல முறை இவர் கைதுசெய்யப்பட்டார்.  இந்திய தேசிய காங்கிரஸில் இருந்து1923ம் ஆண்டு விலகிய யகூப் ஹாசன சயீத், சென்னைமாகாண முஸ்லீம் லீக் அமைப்பை ஏற்படுத்தினார். காங்கிரஸில் மீண்டும் இணைந்த அவர், ராஜாஜிதலைமையிலான காங்கிரஸ் அமைச்சரவையில் இடம்பெற்றார். ஒத்துழையாமை இயக்கம், கிலாபத் இயக்கம்ஆகியவற்றிலும் இங்கு பங்கெடுத்தார். திருமிகு லட்சுமிசாகல் பற்றிய பேசுகையில், அவர் கேப்டன் லட்சுமி எனஅறியப்பட்டார் என டாக்டர் மர்லின் கூறினார். மருத்துவரான லட்சுமி, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸால்தூண்டப்பட்டார். கடந்த 1940ம் ஆண்டு, அவர் சிங்கப்பூர்சென்று இந்திய தேசிய ராணுவத்தில் இணைந்துகேப்டன் ஆனார். சுபாஷ் சந்திர போசுடன் இணைந்துஅவர் ஜான்சி ராணி படைப்பிரிவை ஏற்படுத்தினார். பர்மாவிலிருந்து இந்திய தேசிய ராணுவம்பின்வாங்கியதும், அவர் கைது செய்யப்பட்டார். விசாரணைக்குப்பின் அவர் இந்தியா அனுப்பப்பட்டார்.  சுதந்திரத்துக்குப்பின் சமூக சேவைக்காக தனது வாழ்வைஅவர் அர்ப்பணித்தார். கடந்த 1971ம் ஆண்டு, வங்கதேசஅகதிகளுக்காக அவர் நிவாரண முகாம்களைநடத்தினார். போபால் விஷ வாயு தாக்குதல்சம்பவத்துக்குப்பின் அவர் மருத்துவக் குழுவுக்குதலைமை தாங்கி சென்றார் என டாக்டர் மர்லின்கூறினார்.  சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின், வரலாற்றுத்துறைஉதவிப் போராசிரியர் டாக்டர் சி. ஜெயவீரதேவன், பாளையக்காரர்கள் காலத்து இளம் நாயகர்கள், பலரதுபெயர் தென் தமிழகத்தில், இன்னும் பலருக்குவைக்கப்படுவது பற்றி கூறினார்.  செவல் பாளையத்தைசேர்ந்த சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரன், பூலித்தேவனுடன் இணைந்து கிழக்கு இந்தியகம்பெனிக்கு எதிரான போராட்டத்தில் பங்கெடுத்தார். பூலித்தேவன் இறந்த பிறகு, அவரது குழந்தைகளைபராமரித்த ஒண்டிவீரன் கட்டபொம்மன் மற்றும்ஊமத்துரையுடன் இணைந்து சுதந்திர இயக்கத்துக்காகபோராடினார். ஊமத்துரையுடன் கலந்து கொண்டபோரில் அவர் உயிரிழந்தார்.  சிவகங்கையில் ராணி வேலு நாச்சியாரின்நம்பிக்கைக்குரிய கமாண்டராக இருந்த குயிலிகுறித்தும், உதவிப் போராசிரியர்  சி. ஜெயவீரதேவன்விளக்கினார்.  வேலு நாச்சியாருடன் இணைந்து, ஆங்கிலேயருக்கு எதிராக அவர் எவ்வாறு போரிட்டார்என்பதை அவர் விளக்கினார். சுதந்திர இயக்கத்தின்முதல் மனித வெடிகுண்டாக அவர் செயல்பட்டு, ஆங்கிலேயர்களின் வெடிமருந்து கிடங்கை தகர்க்கஉடலில் தீ வைத்துக் கொண்டார். மற்றொருகுறிப்பிடத்தக்க வீரர், கருப்பு சேர்வை. இவர் தீரன்சின்னமலையின் நம்பிக்கைக்குரிய தலைவர். இவர் திப்புசுல்தானுடன் இணைந்து பயிற்சி பெற்றவர். கடந்த1805ம் ஆண்டு, இவர் தீரன் சின்னமலையுடன் சேர்த்துகைது செய்யப்பட்டார். பின் அவர் தூக்கிலிடப்பட்டார். ஈரோடு மாவட்டம், நலமங்கா பாளையத்தைச் சேர்ந்தபொல்லன் மாதாரி குறித்து பேசிய, டாக்டர்ஜெயவீரதேவன், தீரன் சின்னமலையுடன் இணைந்துஅவர் அனைத்து போரிலும் பங்கெடுத்தார். தீரன்சின்னமலையை பாதுகாப்பதில், அவர் சிறந்த ஒற்றனாகதிகழ்ந்தார். 1805ம் ஆண்டு கைது செய்யப்பட்ட அவர், ஜெயராமபுரத்தில் சுட்டுகொல்லப்பட்டார்.  தலைமை உரையாற்றிய, சென்னை, மண்டல மக்கள்தொடர்பு இயக்குனர் ஜே.காமராஜ், இந்த பெருந்தொற்றுகாலத்தில், 9 கள விளம்பரத்துறை அலுவலகங்கள், பலதலைப்புகளில் பல நிகழ்ச்சிகளை நேரடியாகவும், ஆன்லைன் மூலமாகவும் நடத்துகின்றன என கூறினார். சுதந்திர இந்தியாவின் 75வது ஆண்டுவிழாவைமுன்னிட்டு, போற்றப்படாத சுதந்திர போராட்ட வீரர்கள்பற்றி, இந்த இணைய கருத்தரங்கம் நடத்தப்படுகிறதுஎன அவர் கூறினார். போற்றப்படாத வீரர்களைகவுரவித்து பிரபலப்படுத்தும் முயற்சியாக, சுதந்திரஇயக்கத்தைச் சேர்ந்த 140 தலைவர்களை மத்திய அரசுஅடையாளம் கண்டுள்ளது. அவர்களின் நினைவாக, நாடுமுழுவதும் முதல் கட்டமாக, 75 சிறப்பு நிகழ்ச்சிகள்  ஆகஸ்ட் கடைசி வாரத்தில், நடத்தப்படுகின்றன.  சென்னை மண்டல மக்கள் தொர்பு அலுவலகத்தின்களவிளம்பர அதிகாரி திருமிகு வித்யா ஏ.ஆர், வரவேற்புரை மற்றும் நன்றியுரை ஆற்றினார். மாணவர்கள், போராசிரியர்கள் மற்றும் தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறைஅமைச்சகத்தின் அதிகாரிகள் இந்த கருத்தரங்கில்பங்கேற்றனர். இதில் பங்கேற்றவர்களுக்கு இ-சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.  படவிளக்கம்:  சுதந்திர இந்தியாவின் 75வது ஆண்டை கொண்டாடநடத்தப்பட்ட  ‘சுதந்திர போராட்டத்தின் போற்றப்படாதநாயகர்கள்’ என்ற தலைப்பிலான கருத்தரங்கில் முக்கியபேச்சாளர் சென்னை கிறிஸ்தவ கல்லூரியின் உதவிபேராசிரியர் டாக்டர் மரிலின் கிரேஸி அகஸ்ட்டின்.    சிறப்பு விருந்தினர் சேலம் பெரியார் பல்கலைக்கழகவரலாற்றுத்துறை உதவி பேராசிரியர் டாக்டர்சி.ஜெயவீரதேவன்.  தலைமை உரையாற்றும் சென்னை மண்டல மக்கள்தொடர்பு அலுவலகத்தின் இயக்குனர் திரு. ஜே.காமராஜ்.

தமிழ்நாட்டில் இருந்து அதிகம் அறியப்படாதசுதந்திரப் போராட்ட வீரர்கள்நினைவு கூறப்பட்டனர் Read More

ஹரி இயக்கத்தில் மீண்டும் நடித்த கங்கை அமரன்

பிரபல இசை அமைப்பாளரும் , இளையராஜாவின் தம்பியுமான கங்கைஅமரன், பல படங்களில் வசனகர்த்தாவாகவும், பல ஹிட் பாடல்களையும் எழுதியும், பல ஹிட் படங்களை இயக்கியும் உள்ளார். இசை அமைப்பாளராக, ஒரு விடுகதை ஒரு தொடர்கதை, சுவரில்லாத சித்திரங்கள் , ராமாயி வயசுக்குவந்துட்டா, …

ஹரி இயக்கத்தில் மீண்டும் நடித்த கங்கை அமரன் Read More