விஜய் சேதுபதி வெளியிட்ட “ஆகாயம்” படத்தின் பதாகை

டெல்டா டாக்கீஸ் பட நிறுவனம் சார்பில் ஜெயச்சந்திரன் மற்றும் கார்த்திகா தேவி இணைந்து தயாரித்துள்ள புதிய திரைப்படம் “ஆகாயம்” “தினந்தோறும்” திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் தினந்தோறும் நாகராஜ், அதன் மாபெரும் வெற்றிக்குப் பிறகு ரசிகர்களாலும், திரையுலகினராலும் அந்தப் பெயரிலேயே அன்புடன் அழைக்கப்பட்டார். தொடர்ந்து இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கிய “மின்னலே”, “காக்க காக்க” உள்ளிட்ட வெற்றிப் படங்களில் கதாசிரியராக பணியாற்றினார் என்பது குறிப்பிடதக்கது. அவர், தற்போது “ஆகாயம்” திரைப்படத்தை கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார். “கன்னி மாடம்” திரைப்படத்தின் மூலம் தனது இயல்பான நடிப்பால் அனைவரின் கவனம் ஈர்த்த ஸ்ரீராம் கார்த்திக் இப்படத்தின் கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக ஆலிஷா மிராணி அறிமுகமாகிறார். மேலும் ஷீலா, கனிகா, சந்தான பாரதி, ஜெயபிரகாஷ், கிரி துவாரகிஷ், ஸ்ரீ தேவகிருஷ்ணன், “மெய்யழகன்” படத்தில் நடித்த இந்துமதி மணிகண்டன், தீபா, “மகாராஜா” திரைப்படத்தில் நடித்ததற்காக  தேசிய விருது பெற்ற சஞ்சனா நமீதாஸ், ரோசாரி, ரைட்டர் ஹரிஹரன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.