பல மாதங்களாக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வந்த ஹிப்ஹாப் தமிழா ஆதியின் ‘மீசைய முறுக்கு 2’ திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இசை, காதல், உணர்வுகள், நகைச்சுவை மற்றும் முழுமையான பொழுதுபோக்கை ஒருங்கே கொண்ட இந்த இசை விருந்து, செப்டம்பர் 25 முதல் திரையரங்குகளில் வெளியாகிறது. இதுகுறித்து ஹிப்ஹாப் தமிழா ஆதி கூறியதாவது: “ஒரு கனவாகத் தொடங்கியது, இன்று கோடிக்கணக்கான மக்களின் உணர்வாக மாறியுள்ளது. அந்த மாயாஜாலத்தை மீண்டும் ஒருமுறை ‘மீசைய முறுக்கு 2’ மூலம் அனுபவிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.” என்றார். இந்தப் படத்தில் ஹிப்ஹாப் தமிழாவுடன் சைத்ரா J ஆச்சார், கேதிகா ஷர்மா மற்றும் ரம்யா ரங்கநாதன் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மேலும் ஹர்ஷத் கான், கருணாஸ், நாசர், ஆடுகளம் நரேன் மற்றும் கருணாகரன் உள்ளிட்ட திறமையான நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.*******
*தொழில்நுட்பக் கலைஞர்கள்* கதை, இயக்கம்: ஹிப்ஹாப் தமிழா தயாரிப்பு: அவ்னி மூவீஸ் & பென்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் தயாரிப்பாளர்கள்: குஷ்பூ சுந்தர், ஏ.சி.எஸ். அருண்குமார் இசை: ஹிப்ஹாப் தமிழா படத்தொகுப்பு: பென்னி ஒலிவர் ஒளிப்பதிவு: பாலாஜி சுப்ரமணியம் கூடுதல் ஒளிப்பதிவு: மாதேஷ் மாணிக்கம் CEO – பென்ஸ் மீடியா: ஆர். மதன் குமார் நிர்வாகத் தயாரிப்பாளர்: ஆனந்திதா சுந்தர் கிரியேட்டிவ் தயாரிப்பாளர்: அஸ்வின் ராம் ஆடை வடிவமைப்பு: பூர்ணிமா ராமசாமி கலை இயக்கம்: வி.எஸ். தினேஷ்குமார் புரொடக்ஷன் எக்ஸிகியூட்டிவ்: பி. பாலகோபி நடன அமைப்பு: பாபா பாஸ்கர், சந்தோஷ், ரகு தாப்பா சண்டைப் பயிற்சி: ஆக்ஷன் சந்தோஷ் DI: Knack Studios கலரிஸ்ட்: பிரசாத் சோமசேகர் VFX: 85FX, Hocus Pocus கூடுதல் வசனங்கள்: கரண் கார்க்கி, நிதிஷ் D டைட்டில் கார்டு அனிமேஷன்: அஷ்வின் குமார் மார்க்கெட்டிங்: Bonk Digital புரொடக்ஷன் மார்க்கெட்டிங்: Beatroute பப்ளிசிட்டி டிசைன்ஸ்: Raghavartz முடி & மேக்கப் வடிவமைப்பு: வேல்முருகன் காஸ்ட்யூமர்: அருண் ஸ்டில் புகைப்படம்: பி.கே. ராஜா ஒலிக்கலவை: கண்ணன் கணபத் ஒலி வடிவமைப்பு: ஏ. சதீஷ்குமார் புரொடக்ஷன் கண்ட்ரோலர்: ஹரி வெங்கட் C புரொடக்ஷன் மேனேஜர்: விக்னேஷ் ரத்தினம் மக்கள் தொடர்பு: ரியாஸ் K. அகமது, பாரஸ் ரியாஸ், சதீஷ் (S2 Media)

