பாண்டி பஜார் பகுதியில் வாகன தணிக்கையின்போது கஞ்சா கடத்தி வந்த2 நபர்களை பிடித்து ஒப்படைத்த போக்குவரத்து காவல் குழுவினரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.

சென்னை பெருநகர காவல், R-4 சௌந்தரபாண்டியனார் அங்காடிபோக்குவரத்து காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் S.ஜான், தலைமைக்காவலர் விஜயசாரதி (த.கா.36069) மற்றும் காவலர் Rராஜேஷ் (கா.57230) ஆகியோர் (26.03.2025) இரவு தி.நகர், G.N. செட்டி சாலை, வாணி மஹால் அருகில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது இருசக்கர யமஹா வாகனத்தில் சந்தேகப்படும்படி வந்த 2 நபர்களை நிறுத்தி விசாரணை செய்தபோது, முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தனர். சந்தேகத்தின்பேரில், அவர்களது வாகனத்தை சோதனை செய்தபோது, அவர்கள் கஞ்சா மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. அதன்பேரில், இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்தி வந்த 1.சூர்யதேஜா, வ/19,த/பெ.விஜய், இன்னர் ரிங் ரோடு, கோயம்பேடு, சென்னை, 2.ரத்னபாண்டியன், வ/19, த/பெ.உமாபதி, கம்பர் தெரு, குமரன் நகர் விரிவு, பாடி, திருவள்ளூர் ஆகிய 2 நபர்களை பிடித்து, 1.5 கிலோ கஞ்சா, பணம் ரூ.4,000/- மற்றும் இருசக்கர வாகனத்துடன் R-4 சௌந்தரபாண்டியனார் அங்காடி காவல் நிலைத்தில் ஒப்படைத்தனர்.மேற்படி சம்பவத்தில் வாகனத் தணிக்கையின்போது துரிதமாக செயல்பட்டு, இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்தி வந்த 2 நபர்களை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த R-4 சௌந்தரபாண்டியனார் அங்காடி போக்குவரத்து காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் S.ஜான் மற்றும் தலைமைக் காவலர் Sவிஜயசாரதி ஆகியோரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ.அருண், இ.கா.ப., (27.03.2025) நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.