அரசு வேலை பெற்றுத் தருவதாக ரூ.3.51 கோடி மோசடி- மலேசியாவிலிருந்து திரும்பியவரை தாம்பரம் போலீசார் கைது செய்தார்கள்

தங்க முகையதீன்

கடந்த 02.05.20325 அன்று விழுப்புரம்  மாவட்டத்தை செர்ந்த புகாதாரர் சேதுநாதன் என்பவர்; சென்னை பனையூரில் வசித்தவரும் மற்றும் சென்னை தேனாம்பேட்டை அண்ணாசாலை யில் அசோசியேட் என்ற பெயரில் அலுவலகம் நடத்தி வரும்  அஜய் ரோகன் என்ற அஜய் வாண்டையார் என்பவரின் மீது புகார் கொடுத்திருந்தார். அதில் அரசு ஒப்பந்தங்களைப் பெற்றுத் தருவதாகவும். அரசு வேலை வாங்கி தருவதாகவும் மற்றும் தனது நிறுவனத்தில் கூட்டாளியானால் கணிசமான லாபம் ஈட்டுத் தருவதாகவும் வாக்குறுதியளித்து புகார்தாரரை தூண்டியுள்ளார்.  பொய்யான காரணங்களை கூறி  மொத்தம் ரூ.3.51 கோடியை பெற்றுக்கொண்டு முறைகெடு செய்துள்ளார். இது தொடர்பாக மனுதாரர் பலமுறை கேட்டபோதும் பணத்தை திருப்பி கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளார் என்ற புகாரின் அடிப்படையில் தாம்பரம் மாநகர காவல் மத்திய குற்றப்பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இது சம்பந்தமாக அஜய் என்கிற அஜய்ரோகன் என்கிற அஜய் வாண்டையார் என்பவர் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்ததால் தாம்பரம் மாநகர காவல் ஆணையாளர் முனைவர் அமல்ராஜ் உத்தரவுபடி  தனிப்படை அமைக்கப்பட்டு எதிரியை தேடியதில். எதிரி மலே சியாவிற்கு தப்பி சென்றிருப்பது விசாரணையில் தெரியவந்தது. இந்நிலையில் மலேசியாவில் இருந்து பெங்களுரு விமானநிலையத்திற்கு வந்த எதிரி 05.01.2026 அன்று தாம்பரம் மாநகர காவல். மத்திய குற்றப்பிரிவு  புலன் விசாரணை அதிகாரியால் கைது செய்யப்பட்டார். குற்றவாளியை விசாரிக்கும் பொது தான் செய்த குற்றத்தை ஒப்புக் கொண்டார். மோசடி செய்த தொகையில் இணையதள வர்த்தகம் மூலமாக  பிட்காய்னில் முதலீடு செய்துள்ளதாகவும். ஆடம்பர வாழ்க்கை வாழ அழக்கடி வெளிநாடுகளான மலேசியா. இலங்கை. அரபு நாடுகளுக்கு இன்ப சுற்றுலா சென்றதாகவும், சினிமாவில் நடிப்பதற்காக முதலீடு செய்துள்ளதாகவும்  கூறியுள்ளார். எதிரி மீது ஏற்கனவே சென்னை மத்திய குற்றப்பிரிவிலும். நுங்கம்பாக்கம் மற்றும். பட்டினம்பாக்கம் காவல் நிலையங்களிலும் மோசடி மற்றும் கட்டப்பஞ்சாயத்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டு குண்டர் தடுப்புக்காவலில் சென்று வந்தவர் என்றும் தெரியவருகிறது. எதிரியிடம் விசாரணை முடித்து 05.01.2026 ஆம் தேதி ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 15 நாட்கள் நீதிமன்ற காவலில் புழல் மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.