கோவை பிலிம் பேக்ட்ரி சார்பில் பிரசாந்த் ரங்கசாமி தயாரிப்பில் ஹரி மகாதேவன் இயக்கத்தில், வைபவ், பூர்ணிமா ரவி நடிப்பில், மாறுபட்ட களத்தில், உருவாகியிருக்கும் திரைப்படம் “யெல்லோ”. பெண் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு, பொழுதுபோக்கு படமாக அனைவரையும் ஈர்க்கும் வகையில் உருவாகியிருக்கும் இப்படம் வரும் நவம்பர் 21 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், இப்படத்தின் இசை மற்றும் காணொளி வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்வினில், இயக்குநர் ஹரி மகாதேவன் பேசியதாவது: தயாரிப்பாளர் பிரசாந்த் அண்ணாவுக்கு நிறையக் கடமைப்பட்டுள்ளேன். பூர்ணிமா தான் அவரை அறிமுகப்படுத்தினார். கொரில்லா மேக்கிங் ஸ்டைலில் ஒரு கேமராவை எடுத்துக்கொண்டு பயணம் போவோம், என்ன கிடைக்கிறதோ அது தான் படம் என்றேன். இதைக்கேட்ட பிறகும் அவர் என்னை நிராகரிக்கவில்லை. என்னை முழுதாக நம்பினார். பின்னர் ஒரு திரைக்கதை முழுதாக எழுதி அவரிடம் காட்டினேன். நான் நினைத்ததை விடப் பெரிய அளவில் அவர் ஆதரவாக இருந்தார். இப்படத்தில் நாயகனாக வைபவ் நடித்துள்ளார். பூர்ணிமா ரவி முதன்மை பாத்திரத்தில் நாயகியாக நடித்துள்ளார். இயக்குநர் பிரபு சாலமன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். நமீதா கிருஷ்ணமூர்த்தி, சாய் பிரசன்னா, டெல்லி கணேசன், வினோதினி வைத்தியநாதன் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.********
நான் கொரோனா காலத்தில் பல திரைக்கதை எழுதி, பலரைத் தொடர்பு கொண்டேன், அதில் ஒப்புக்கொண்டு நடித்தவர் பூர்ணிமா மட்டும் தான். அவருடன் ஒரு படம் செய்யலாம் என டிஸ்கஸ் செய்தது தான் இந்தப்படம். இந்தப்படத்திற்காக முழு அர்ப்பணிப்புடன் ஓய்வே இல்லாமல் இப்படத்தில் நடித்துத் தந்தார். வைபவ் பூர்ணிமா மூலமாக வந்தவர், சிறப்பாக நடித்துள்ளார். சாய் என்னுடைய நெருங்கிய நண்பர் இந்தப்படத்தில் அவர் நடித்ததைத் தாண்டி எல்லா டிபார்ட்மெண்டிலும் வேலை பார்த்துள்ளார் நன்றி. கிளிஃபி நானும் அவரும் டீக்கடையில் உட்கார்ந்து பலமுறை விவாதித்துள்ளோம். அவர் தந்த பாடல்களுக்கு நன்றி. ஆனந்த் என்னுடைய முகவரியான காத்தாடி பாடலை தந்தவன், அவனை நான் முழுதாக நம்புகிறேன். அபி இரவு பகல் பாராமல் கொஞ்சம் கூட சலித்துக் கொள்ளாமல் கேமரா செய்து தந்துள்ளார். புரடக்சனிலும் நிறைய உதவியாக இருந்தார். காஸ்ட்யூம் செய்து தந்த மீராவிற்கு நன்றி. நல்ல பாடல்கள் தந்த மோகன்ராஜ், ராஜேஷ் இருவருக்கும் நன்றி. ஹரி உத்தாரா பல புரடக்சன் கம்பெனி ஏறி இறங்கிய பிறகு, எங்களை நம்பி, எங்கள் படத்தைப் பார்த்து வெளியிடுவதற்கு நன்றி. என்னுடன் திரைக்கதையிலிருந்து முழுதாக சப்போர்ட்டாக இருந்த ஹரிஷ்மாவிற்கு நன்றி. டெல்லிகணேஷ் சார் எங்களை நம்பி வந்து நடித்துத் தந்தார். அவர் எங்கள் படத்தில் நடித்தது பெருமை. இப்படத்தில் உழைத்த அனைவருக்கும் நன்றி. படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும். நன்றி.
தொழில் நுட்ப கலைஞர்கள் விபரம் எழுத்து, இயக்கம் – ஹரி மகாதேவன் இசை – ஆனந்த் காசிநாத் ஒளிப்பதிவு – அபி ஆத்விக் எடிட்டர் – ஶ்ரீ வாட்சன் கலை இயக்கம் – கார்த்திக் கிருஷ்ணன் மக்கள் தொடர்பு – பரணி அழகிரி

