“வேம்பு” திரைப்பட விமர்சனம்

கோல்டன் சுரேஷ் மற்றும் விஜயலட்சுமி ஆகியோரின் தயாரிப்பில் ஜஸ்டின் பிரபு இயக்கத்தில் ஹரிகிருஷ்ணன், ஷீலா, மாரிமுத்து, ஜெயராவ், ஜானகி ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “வேம்பு”. பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காத ஆணாதிக்கம் மிகுந்த ஒரு கிராமத்தில் தன் பெற்றோர்களுடன் வாழ்கிறாள். ஷீலா. அவளுடைய அத்தை மகன் ஹரிகிருஷ்ணன். இருவரும் சிறுவயது முதலே நண்பர்களாக ஒன்றாகவே ஓடியாடி விளையாடி வாழ்ந்து பருவ வயதை எட்டியவர்கள். பருவ வயதிலும் இருவரும் ஒன்றாகவெ ஊர் சுற்றுகிறார்கள். ஷீலாவின் தந்தை, தனது மகளை முற்போக்கு சிந்தனையுள்ள பெண்ணாக வளர்க்கிறார். ஷீலாவும் சிலம்பம் விளையாட்டில் மாநில் அளவில் வெற்றி பெறவேண்டும் என்ற ஆசையில் பக்கத்து ஊருக்குச் சென்று சிலம்பம் கற்று வருகிறார். ஹரிகிருஷ்ணன் தனது கிராமத்திலேயே சொந்தமாக நிழற்பட கடை (போட்டோ ஸ்டுடியோ) வைத்து நடத்தி வருகிறார். வேலை நேரம்போக மீதி நேரத்தில் ஷீலாவும் ஹரிகிருஷ்ணனும் காதலர்களாக ஒன்றாகவே ஊர் சுற்றி திரிவார்கள். சிலம்பத்தில் மாநில அளவில் வெற்றி பெற்ற பிறகே திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று ஷீலா நினைத்திருக்க, ஊர் வழக்கத்திற்கு கட்டுப்பட்டு ஷீலாவுக்கும் ஹரிகிருஷ்ணனுக்கும் பெற்றோர்கள் திருமணம் செய்து வைக்கிறார்கள். சிலம்பத்தில் மாநில அளவில் வெற்றி பெற்றபிறகே குழந்தை பெற்றுக் கொள்ளவேண்டும் என்று ஷீலா தன் கணவர் ஹரிகிருஷ்ணனிடம் சொல்கிறாள். அதற்கு முழு சம்மதத்தையும் ஹரிகிருஷ்ணன் தெரிவித்து தாம்பத்திய உறவை தள்ளி வைக்கிறார்கள். ஓரிரு நாட்ச்கள் கழித்து அவர்கள் இருவரையும் கோயிலுக்கு அனுப்பி வைக்கிறார்கள் பெற்றோர்கள். ஆனால் அவர்கள் கோயிலுக்குச் செல்லாமல் வழக்கமாக சந்திக்கும் காட்டுப்பகுதிக்கு இருசக்கர மோட்டார் வாகனத்தில் சென்று இரவு நேரத்தில் வீட்டுக்கு வரும் வழியில் கல்லில் மோதி கீழே விழுகிறார்கள். இந்த விபத்தில் ஷீலா சிறு காயத்துடன் தப்பிக்கிறாள். ஆனால் ஹரிகிருஷ்ணன் இரு கண்களின் பார்வையும் இழக்கிறார். பார்வையிழந்த கணவரோடு ஷீலா வாழ்ந்தாரா? இல்லையா? சிலம்பத்தில் மாநில் அளவில் ஷீலா வெற்றி பெற்றாரா? இல்லையா? ஹரிகிருஷ்ணனின் குடும்ப வாழ்க்கை என்னானது? என்பதுதான் மீதிக்கதை. வேம்பு கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஷீலா, வீரப்பெண்ணின் இலக்கணத்தோடு சுறுசுறுப்பாகவும் யதார்த்த்கமாகவும் நடித்து கைத்தட்டலை பெறுகிறார். அவர் வருகின்ற் ஒவ்வொரு காட்சியின் மூலமாக பெண்ணினத்திற்கு புதிய பாதையை அறிமுகப்படுத்திக் கொண்டேயிருக்கிறார் இயக்குநர் ஜஸ்டின் பிரபு. ஹரிகிருஷ்ணன் பார்வையிழந்த விழிகள் பிதுங்கி நிற்பதையும் அகல விரிக்கும் இமைகளை தத்ரூபமாக காட்டி அசத்தியிருக்கிறார். கிராமத்தின் அழகை திரையில் அள்ளித்தந்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் குமரன். அருமையான படபிடிப்பு. கிராமத்திலிருப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது. சட்டமன்ற உறுப்பினராக வரும் மாரிமுத்துவின் குளிர்ச்சியான நடிப்பால் அனைவரையும் கவர்கிறார். (இப்படியொரு எம்.எல்.ஏ. எந்த தொகுதியிலிருந்தாலும் அவரைக்கண்டு கைகுலுக்க ஆசை பிறக்கிறது மனதுக்குள்). ஏழ்மை ஊற்றெடுக்கும் உடம்புக்காரியாக மாறி நடித்திருக்கிறார் ஜானகி அம்மா. தற்காப்புக் கலையை கைகொடுத்து தூக்கிவிட்ட இயக்குநர் ஜஸ்டின் பிரபுவுக்கு பெண்ணினம் நன்றி சொல்ல் கடமைபட்டிருக்கிறது.