“கொலைச்சேவல்” திரைப்பட விமர்சனம்

ஆர்.பி.பாலா, கௌடல்யா பாலா ஆகியோரின் தயாரிப்பில் துதிவாணன் இயக்கத்தில் கலையரசன், தீபா பாலு, பாலசுப்பிரமணியன், கஜராஜ், விஜய் சத்யா, ஆதவ் சந்திரா, அகரன் வெங்கட், விஜய் லட்சுமி, ஜெய லட்சுமி, ராஜாமணி, தனலட்சுமி, மஞ்சுளா, கயல், மணிமேகலை ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த்பிருக்கும் படம் கொலைச்சேவல்”. கலையரசனும் தீபாவும் காதலர்கள். இவருவரும் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறார்கள். அதற்கு இருவரின் பெற்றோர்களும் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். இதன்காரணமாக காதலர்கள் இருவரும் ஊரைவிட்டு ஓடிப்போய் வெளியூரில் திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக வாழ்க்கை நடத்துகிறார்கள், மூன்று மாதம் கழித்து தீபா கருவுருகிறாள். இந்நிலையில் தங்களது குலதெய்வத்திற்கு பொங்கல் வைத்து சாமிகும்மிட்டால் குழந்தை குறைவின்றி பிறக்கும் என நம்புகிறார்கள். அதனால் தங்களது குலதெய்வத்துக்கு பொங்கல் வைக்க தங்களது சொந்த ஊருக்கு கலையரசனும் தீபாவும் வருகிறார்கள். ஊருக்குள் வந்ததும் கலயரசனுக்கும் தீபாவுக்கும் எதிர்பாராத பயங்கர சம்பவம் ஒன்று நடக்கிறது. அது என்ன சம்பவம்? அதிலிருந்து கலையரசனும் தீபாவும் தப்பித்தார்களா? இல்லையா? என்பதை வெள்ளித்திரையில் விளக்குகிறார் இயக்குநர் துதிவாணன், கலையரசனின் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி பார்வையாளர்களின் மனதில் நிறைந்து விடுகிறார். கதையின் நாயகி தீபா பாலு அறிமுக நடிகையைப் போல் இல்லாமல் அனுபமிக்க நடிகையாக திகழ்ந்திருக்கிறார். அவரின் குடும்பபாங்கான முகத்தோற்றம் கதாபாத்திரத்துக்கு துணை செய்திருக்கிறது. கடின உழைப்பைக் கொடுத்து மனுஷி நடித்திருக்கிறார். இன்னும் சொல்லப்போனால் கதாபாத்திரத்தை தலையில் சும்மாடுகட்டி சுமந்திருக்கிறார். அன்றாடம் நாட்டில் நடந்து கொண்டிருக்கும் நயவஞ்சகச் செயலை எதார்த்தமான நடையில் திரையில் காட்டி பாராட்டைப் பெறுகிறார் இயக்குநர் துதிவாணன்