பார்வதா என்டர்மெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் கருப்பையா சி. ராம் தயாரிப்பில், ‘அசுரன்’, ‘விடுதலை 2’ திரைப்படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமான கென் கருணாஸ் நாயகனாக நடித்து இயக்க, பள்ளி பருவ வாழ்க்கையை மையமாக கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் “யூத்”. அனிஷ்மா மற்றும் மீனாட்சி தினேஷ், பிரியன்ஷி யாதவ்,ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். தேவதர்ஷினி மற்றும் சுராஜ் வெஞ்சாரமூடு ஆகியோர் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.’யூத்’ திரைப்படத்தை முதல் பாடலான ‘முட்ட கலக்கி’ ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. ‘பறந்தனே பெண்ணே’ பாடலை கென் கருணாஸ் பாடியிருந்தார். 3வது பாடலான ‘ஆச புள்ள’ வெளியாகி வைரலானது. இப்பாடலை ஜி.வி.பிரகாஷ் பாடியுள்ளார். இந்தப் படம் மார்ச் 19-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது..இப்படத்தின் அறிமுக நிகழ்வில் நடிகர் தனுஷ் பேசியதாவது: “முன்னாடி நாங்கள் சினிமாவுக்கு வந்த போது, சீனியர்களை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும் என்று சொல்லுவார்கள். ஆனால் இப்போது காலம் மாறிவிட்டது. இன்றைய இளம் தலைமுறை 20–25 வயதிலேயே மிக வேகமாக முன்னேறுகிறார்கள். இப்போது நாங்கள்தான் அவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும். கென் இந்த வயதில் இவ்வளவு பெரிய பொறுப்புடன் ஒரு படத்தை இயக்குவது சாதாரண விஷயம் இல்லை. அவருடைய உழைப்பும் நம்பிக்கையும் பாராட்டத்தக்கது.ழ்.******
இந்த வயதில் பலர் வேறு விஷயங்களில் கவனம் செலுத்துவார்கள். ஆனால் கேன் தனது கவனத்தை முழுவதும் தனது கனவு மற்றும் குடும்பத்தின் மீது வைத்திருக்கிறார். அதற்காக அவருக்கு வாழ்த்துகள். யூத் படம் பெரிய வெற்றி பெற்று, கேனுக்கும் அவரை நம்பி வந்த முழு படக்குழுவுக்கும் ஒரு பெரிய ஆசீர்வாதமாக அமைய வேண்டும் வாழ்த்துக்கள்.

