ரிஷிகாந்த், அப்தூல் லீ, மௌரிஷ் தாஸ், அத்விதா அறுமுகம், ஆர்.பாண்டியராஜன், சின்னி ஜெயந்த், ரினி மற்றும் நந்திதா ஸ்ரீகுமார் நடித்துள்ள ஏழு எபிசோடுகள் கொண்ட இந்த தொடரை, நவீன் ஜார்ஜ் தாமஸ் இயக்கத்தில், பன்பாய் புரடெக்ஷன் நிறுவனத்தின் சார்பில் ஜித்தின் துரை தயாரித்துள்ளார். இந்தியா உள்பட 240 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் மார்ச் 13 அன்று வெளியாகும் ‘லோக்கல் டைம்ஸ்’, பிரவீன் முத்துரங்கன் எழுதியுள்ளார், அபிநவ் கஸ்தூரா, பிரவீன் முத்துரங்கன், சாத்விக் கதே,தாமஸ் மானுவல் மற்றும் விஷ்வக் சென் பி. ஆகியோரால் உருவாக்கப்பட்டுள்ளது.*******
ஏழ்மையில் இருந்தாலும் அளவற்ற நம்பிக்கையுடன் வாழும் நான்கு நண்பர்கள் வீரா, அழகு, வள்ளி மற்றும் முத்து. வீராவின் தாத்தாவுக்கு சொந்தமான, ஒரு காலத்தில் பெருமை பெற்ற பிராந்திய பத்திரிகையான ‘நம்ம செய்தி’ பத்திரிகையை காப்பாற்ற நால்வரும் போராடுகின்றனர். இந்த நால்வரின் குழப்பமான வாழ்க்கை, நகைச்சுவையான சாகசங்கள், உணர்ச்சிப் போராட்டங்கள் மற்றும் அவர்களை வீழ்த்தத் துடிக்கும் ஒரு பலமான எதிரி ஆகியவற்றைச் சுற்றி இத்தொடரின் கதை நகர்கிறது.பிரைம் வீடியோ இந்தியா ஒரிஜினல்ஸ் தலைவர் நிகில் மதோக் கூறுகையில்..,
“லோக்கல் டைம்ஸ் என்பது உணர்ச்சி ரீதியாக மனதைத் தொடும் கதை. ஒரு உள்ளூர் வார இதழின் செய்தியை மையமாகக் கொண்டிருந்தாலும், இதன் மைய கருக்கள் நட்பு மற்றும் உறுதியான மனப்பாங்கு என்பதால் அவை உலகளவில் அனைவரும் உணரக்கூடியவை. திறமையான நடிகர்கள் மற்றும் படைப்பாற்றல் கொண்ட குழுவுடன் உருவாகியுள்ள இந்த சீரிஸ், இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதும் பார்வையாளர்களைக் கவரும் பிராந்திய கதைகளை வழங்கும் எங்கள் அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது,” என்றார்

