கே வி என் புரொடக்ஷன்ஸ் – நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் வெங்கட் கே. நாராயணா தயாரித்துள்ள “கே டி : தி டெவில் “ திரைப்படம் இந்திய வெளியீடுகளில் ஒன்றாக உள்ளது. இப்படத்தில் துருவா சர்ஜா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவருடன் ஷில்பா ஷெட்டி, வி. ரவிச்சந்திரன், ரமேஷ் அரவிந்த், ரீஷ்மா நானையா மற்றும் நோரா ஃபதேஹி உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்துள்ளனர். விரைவில் வெளியாக உள்ள இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் ஏப்ரல் 30 அன்று திரைக்கு வருகிறது********
இந்நிலையில் இப்படத்தின் தயாரிப்பாளர்கள் ‘திற நீ எந்தன் தரணி திற நீ – Thira Nee Enthan Tharani Thira Nee” எனும் துள்ளல் மிகுந்த மற்றும் உற்சாகமான ஒரு நடனப் பாடலை வெளியிட்டுள்ளனர். அதிரடியான தாளமும் கொண்டாட்ட மனநிலையையும் கொண்ட இந்த பாடல் ரசிகர்களிடையே ஒரு முக்கியமான ‘பார்ட்டி கீதம்’ ஆக ( Party Anthem) உருவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பரபரப்பான பாலிவுட் நடன தாரகை நோரா ஃபதேஹி மற்றும் வசீகரமான நட்சத்திர நடிகர் சஞ்சய் தத் ஆகியோர் இணைந்து நடித்துள்ள இந்த பாடல் – கவர்ச்சி – திரையில் இருவரின் ஆளுமை மிக்க தோற்றம்- விறுவிறுப்பான நடன அசைவுகள் – ஆகியவற்றை கொண்டுள்ளது. அர்ஜுன் ஜன்யா இசையமைத்துள்ள இந்தப் பாடல் பல்வேறு மொழி பேசும் ரசிகர்களின் மனதிலும் ஆழமாக பதியும் வகையிலான ஒரு ஈர்க்கக்கூடிய தாள லயத்தை கொண்டுள்ளது.

