இருந்தவர் பிரதீப்தான் – விக்னேஷ்சிவன்

பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடிக்க, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவான ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ திரைப்படம், கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகி, ரசிகர்கள் மற்றும் திரை ஆர்வலர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பைப் பெற்று ஓடிக் கொண்டிருக்கிறது. இதற்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வில் இயக்குநர் விக்னேஷ்சிவன் வெளிப்படையாக பேசினார். அப்போது அவர் கூறியதாவது: “இந்தப் படம் நடக்க காரணம் பிரதீப் தான். ஆரம்பத்திலிருந்தே பொருளாதார  சிக்கல்கள் இருந்தது. ஆனாலும் இந்தப் படம் உருவானது அவரால் தான். இன்றைக்கு நிறைய படங்கள் வெளிவராமல் நிற்கிறது. ஒரு மிகப் பெரியபடம் திரையரங்கிற்கு வராமலேயே இணையதளத்தில் கசிந்துவிட்டது. அப்படத்தின் இயக்குநரின் நிலைமை ரொம்ப கஷ்டமாக இருக்கும். அந்த வலியை ஒரு இயக்குநர்தான் உணர முடியும். அந்த இடத்தில், சமீபத்தில் கசிந்த பிரச்சனையை சந்தித்த வினோத் அவர்களுக்கும் என் மனமார்ந்த அனுதாபம். அது ஒரு இயக்குநருக்கு மிகப்பெரிய வலி. இந்தப் படத்தையும் நான் என்னால் முடிந்தவரை மற்றவர்களின் ஆலோசனைகளுக்கு இடம் கொடுக்காமல் எடுத்தேன். ஒரு தடவை தான் எடுக்க முடியும். அதனால் முழுமையாக எடுத்தேன். பிரதீப் ஒரு கதாநாயகன் மட்டும் இல்லை, ஒரு அர்ப்பணிப்புள்ள கலைஞன். நேரம், ஒழுக்கம், அர்ப்பணிப்பு எல்லாமே சிறப்பாக இருந்தது. *******

இந்தப் படம் நீண்ட காலம் ஓடும் என்று நான் நம்புகிறேன். சில கலவையான விமர்சனங்கள் இருந்தாலும்,  தியேட்டரில் போய் பார்த்தீங்கன்னா கண்டிப்பாக ரசிப்பீர்கள். என்னோட வார்த்தையை நம்பலாம். இந்தப் படம் சீக்கிரம் 100 கோடி கிளப்பில் சேரும் — நான் நம்பிக்கையோடு சொல்கிறேன்.

கிருத்தி இன்னும் சின்ன குழந்தை மாதிரி தான். அவங்க அம்மாவும் அதே மாதிரி. செட்டில் பல நேரங்களில் அவர்களை ஒரு குழந்தையை கவனிப்பது போலவே நாங்கள் பார்த்துக்கொண்டோம். சில சமயங்களில் சிறிய தவறுகள் நடந்தாலும், வேலை செய்யும் போது அவருடைய அர்ப்பணிப்பு மிக உயர்ந்தது. சிறப்பாக அந்த ஸ்விம்மிங் பூல் காட்சியில், வேறு இடங்களில் படப்பிடிப்பு முடித்து வந்த பிறகும், இரவெல்லாம் உழைத்து ஒரு நாளும் சோர்வு காட்டாமல் நடித்தார். மிகவும் இனிமையானவர், அவருடன் வேலை செய்தது எனக்கு மிகவும் பிடித்த அனுபவம்.

ரவி வர்மன் அவருடைய ஒவ்வொரு ஃப்ரேமும் மிகவும் அழகாக இருக்கும். மலேசியாவில் சாதாரண சாலையில் எடுத்த காட்சிகளுக்கே ஒரு மாயம் சேர்த்தது ஒளிப்பதிவாளர் ரவி வர்மன் சார் அவர்களின் திறமை. அவர் எளிமையாகவே அசாதாரண காட்சிகளை உருவாக்கும் தனித்திறமை கொண்டவர்.