“மொத ராத்திரி” திரைப்பட விமர்சனம்

நவீன் பெர்னேனி மற்றும் ஒய்.ரவிசங்கர் ஆகியோரின் தயாரிப்பில்,  ராஜா கருப்பசாமி இயக்கத்தில் ரிஷிகாந்த், அனிஷ்மா. சேத்தன், வெங்கடேஷ், பகவதி பெருமாள், பானுப்ரியா ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “மொத ராத்திரி”. மனிதர்களின் உறவுகளையும் உரையாடல்களையும் மையமாக வைத்து கதையை நகர்த்தியிருக்கிறார் இயக்குநர் ராஜா கருப்பசாமி. நகைச்சுவை, காதல், குடும்ப உறவுகள் என அனைத்தையும் கலந்து சொல்லப்பட்ட எளிமையான, ரசிக்கக்கூடிய பொழுதுபோக்கான திரைப்படம். வெளிநாட்டில் பணிபுரியும் ரிஷிகாந்துக்கு தெரியாமலேயே அவரது திருமண ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. மறுபுறம் மணப்பெண் அனீஸ்மா, தான் காதலித்தவருடன் ஓடிப்போகத் தயாராக இருக்கிறார். எதிர்பாராத சூழலில் இருவருக்கும் திருமணம் நடக்கிறது. மொத ராத்திரியில் அனிஷ்மா சொல்லும் உண்மை அவர்களது வாழ்க்கையையே மாற்றிவிடுகிறது. அதன்பிறகு நடக்கும் சம்பவங்களின் தொகுப்புதான் மீதிக் கதை.

ரிஷிகாந்த் தனது கதாபாத்திரத்தை இயல்பாக கையாண்டிருக்கிறார். அவரது முகபாவனைகளும் உடல்மொழியும் சிறப்பாக அமைந்துள்ளன. சேத்தனுடன் மழையில் இடம்பெறும் காட்சிகளில் அவரது நடிப்பு கவனம் ஈர்க்கிறது. கதாநாயகி அனீஸ்மா காதல், குழப்பம், மன அழுத்தம் என பல்வேறு உணர்வுகளை இயல்பாக வெளிப்படுத்தியுள்ளார். கோவில் பூசாரியாக சேத்தன் மற்றும் அப்துல், லீ, பக்ஸ் ஆகியோரின் கூட்டணி படத்தின் சுவாரஸ்யத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கிறது. இயக்குநர் ராஜா கருப்புசாமி பெரிய திருப்பங்களைவிட மனிதர்களின் உறவுகளையும் உரையாடல்களையும் மையமாக வைத்து கதையை நகர்த்தியிருக்கிறார். கிராமத்து பின்னணியில் காதல், திருமணம், குடும்பம் மற்றும் சாதி குறித்த கருத்துகளை நகைச்சுவையுடன் இணைத்திருப்பது ரசிக்க வைக்கிறது. பரத் சங்கரின் பின்னணி இசையும், சுரேந்திரன் பரஞ்ஜோதியின் ஒளிப்பதிவும் கதையின் உணர்வுகளுக்கு துணை நிற்கின்றன. மொத்தத்தில், நகைச்சுவை, காதல், குடும்ப உறவுகள் என அனைத்தையும் கலந்து சொல்லப்பட்ட எளிமையான, ரசிக்கக்கூடிய பொழுதுபோக்கு படம் ‘மொத ராத்திரி’. கலகல்ப்பான திரைப்படம். குடும்பத்தினருடன் சென்று பார்க்கவேண்டிய படம்.