சாய் துர்கா தேஜின் கிராமத்து அவதாரம்

சாய் துர்கா தேஜ் சங்கராந்தி கொண்டாட்டங்களை தீவிரப்படுத்தும் வகையில், அவரது  திரைப்படமான  “சம்பரால எட்டிகட்டு” இன் புதிய பதாகை வெளியாகியுள்ளது. ரோஹித் கே.பி.இயக்கத்தில், கே. நிரஞ்சன் ரெட்டி மற்றும் சைதன்யா ரெட்டி தயாரிப்பில் இப்படம் உருவாகுகிறது. கிராமத்து வாழ்வியலை அடிப்படையாகக் கொண்டு இப்படம்  உருவாகிறது. மண் மணக்கும் கிராமத்து இளைஞனாக , சாம்பல் நிற சட்டையும் பாரம்பரிய பஞ்ச கட்டு  அணிந்து, காலில் செருப்பு இல்லாமல் நடந்து செல்லும் சாய் துர்கா தேஜ்—அருகில் ஒரு காளை மாட்டை இழுத்து செல்கிறார்.  அவரது அடர்த்தியான தாடி, தீவிரமான பார்வை, நுண்ணிய புன்னகை எல்லாம் இணைந்து, கடுமையும், உள்ளார்ந்த வெப்பமும் ஒன்றாக இணைந்து அவரது கதாப்பாத்திரத்தை அழகாக பிரதிபலிக்கின்றன.*********

இந்தக் கதாபாத்திரத்திற்காக, நடிகர் தனது உடல் அமைப்பையும்,  உடல் மொழியையும் முழுதாக மாற்றியுள்ளார். மண்ணோடு பிணைந்த மனிதனாக, தன் உலகில் உருவாகும் மோதல்களை எதிர்கொள்ளும் அவர், பல கடுமையான மற்றும் உடல் வலிமை தேவைப்படும் ஆக்‌ஷன் காட்சிகளில் மிகுந்த அர்ப்பணிப்புடன் நடித்துள்ளார்.

தொழில்நுட்ப குழு: கதை, இயக்கம்: ரோஹித் KP தயாரிப்பாளர்கள்: K. நிரஞ்சன் ரெட்டி, சைதன்யா ரெட்டி பேனர்: ப்ரைம் ஷோ எண்டர்டெயின்மெண்ட் ஒளிப்பதிவு: வெற்றிவேல் பழனிசாமி இசை: B. அஜனீஷ் லோக்நாத் எடிட்டிங்: நவீன் விஜய கிருஷ்ணா கலை இயக்கம்: காந்தி நடிகுடிகர் உடை வடிவமைப்பு: ஆயிஷா மரியம் மக்கள் தொடர்பு : யுவராஜ் மார்க்கெட்டிங்: ஹாஷ்டேக் மீடியா