இந்தியா முழுவதும் மொழி எல்லைகளைக் கடந்து பெரும் வரவேற்பைப் பெற்ற தயாரிப்பாளர் ஷெரிப் முகமது தனது அடுத்த முயற்சியாக ‘கட்டாளன்’ படத்தை உருவாக்கி வருகிறார். இந்த படத்தில் ஆண்டனி வர்கீஸ் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார், இயக்குநர் பால் ஜார்ஜ் இப்படத்தை இயக்குகிறார். இப்படத்தை மேலும் விசேஷமாக்குவது, ‘காந்தாரா’-இன் இசைச் சாம்ராட்டான அஜனீஷ் லோக்நாத்தும் தயாரிப்பாளர் ஷெரிப் முகமதுமாகிய இருவரின் புதிய கூட்டணியாகும். மனதை பதறவைக்கும் பின்னணி இசைகளுக்குப் பெயர் பெற்ற அஜனீஷின் இசை ‘கட்டாளன்’-இன் திரை அனுபவத்தை மேலும் உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. “கட்டாளன்” படத்தின் பதாகை தற்போது இணையத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.******
ஒரு தீவிரமான திரில்லராக, ஆக்சன் அதிரடிப் படமாக இருக்கும் என்பதைக் குறிக்கின்றது. போஸ்டரில், நடு காட்டுக்குள் பலர் செத்து விழுந்து கிடக்க, நடுவில் கொளுந்து விட்டு எரியும் நெருப்புக்கு மத்தியில், பிபி கையில் கோடாளியுடன் மிரட்டலாக தோற்றமளிக்கிறார்.
ஜெயிலர்’, ‘லியோ’, ‘ஜவான்’ மற்றும் ‘கூலி’ போன்ற திரைப்படங்களின் எழுத்துரு வடிவமைப்புகளை உருவாக்கிய Ident Labs நிறுவனம், ‘கட்டாளன்’ என்ற தலைப்புக்கான டைட்டில் டிசைனை செய்துள்ளது. போஸ்டரின் டைட்டில் நாகங்கள் மற்றும் பற்கள் ஆகியவற்றின் பின்னணியில் மறைத்து உருவாக்கப்பட்டுள்ளது. படக்குழு பல ஆச்சரியங்களை டைட்டிலேயே வைத்திருக்கிறது. தனது முதல் திரைப்படத்திலேயே, பெரிய கவனத்தைப் பெற்ற Cubes Entertainments நிறுவனம், இரண்டாவது படத்திற்கும், இப்போது அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. ‘கட்டாளன்’ ஒரு மிகப்பெரிய திரையரங்க அனுபவமாக உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.