பழுதடைந்த குடிசை மாற்று வீடுகளை இடித்துவிட்டு புதிய வீடுகள் கட்டும் பணி ஆய்வு

தமிழ்நாடு  குடிசைப்பகுதி மாற்று வாரியத்தால் சேப்பாக்கம் திட்டப்பகுதியில் 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு தற்போது சிதிலமடைந்த நிலையிலுள்ள குடியிருப்புகளை அகற்றி மறுகட்டுமான திட்டத்தின் கீழ் புதிய குடியிருப்புகள் கட்டுவதற்கான பணிகளை ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் …

பழுதடைந்த குடிசை மாற்று வீடுகளை இடித்துவிட்டு புதிய வீடுகள் கட்டும் பணி ஆய்வு Read More

தமிழ்நாட்டில் ஊரடங்கு சில தளர்வுகளுடன் 28-06-2021 வரை நீட்டிப்பை மு.க.ஸ்டாலின் அறிவித்தார்

கொரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவலைத் தடுப்பதற்காக, இந்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாட்டில் 25–3-2020 முதல் தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், ஊரடங்கு சில தளர்வுகளுடன் நடைமுறையில் இருந்து வருகிறது. இந்த ஊரடங்கு 30-6-2021 வரை தொடர்ந்து அமலில் இருக்கும் என ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகம் …

தமிழ்நாட்டில் ஊரடங்கு சில தளர்வுகளுடன் 28-06-2021 வரை நீட்டிப்பை மு.க.ஸ்டாலின் அறிவித்தார் Read More

13,553 இலங்கைத் தமிழர் குடும்பங்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக 4000 ரூபாய் வழங்கப்படும் – முதல்வர் ஸ்டாலின்

தமிழ்நாட்டில் கொரோனா நோய்த் தொற்று பரவல் காரணமாகவும், ஊரடங்கு காலத்தில் உள்ள பல்வேறு கட்டுப்பாடுகள் காரணமாகவும் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களின் வாழ்வாதாரத்திற்கு உதவும் வகையில்,அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் முகாம் வாழ் இலங்கைத் தமிழர் குடும்பங்களுக்கு 4000 ரூபாய்நிவாரண நிதி வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டில் தங்கியிருக்கும் இலங்கைத் தமிழர்கள்  பலர் பல்வேறு பகுதிகளில் …

13,553 இலங்கைத் தமிழர் குடும்பங்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக 4000 ரூபாய் வழங்கப்படும் – முதல்வர் ஸ்டாலின் Read More

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் யானைக்கு அளிக்கப்படும் சிகிச்சையை அமைச்சர் சேகர் பாபு கேட்டறிந்தார்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில்   ரூ.18 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் வீரவசந்தராயர் மண்டபம் திருப்பணிகள் மற்றும் கோயில் யானைக்குத் தேவையான மேல் சிகிக்சைகள் குறித்து இன்று (18.06.2021) மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேரில் பார்வையிட்டு ஆய்வு  மேற்கொண்டார். மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் …

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் யானைக்கு அளிக்கப்படும் சிகிச்சையை அமைச்சர் சேகர் பாபு கேட்டறிந்தார் Read More

கொரோனா காலத்தில் களப்பணியாற்றிவரும் காவலர்களுக்கு ரூ.58 கோடி ஊக்கத் தொகை அறிவித்தார் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாட்டில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், களப்பணியாற்றி வரும் காவல் துறையினர் தங்களது இன்னுயிரையும் பொருட்படுத்தாது கடமையாற்றி வருகின்றனர். அவர்களது தன்னலமற்ற பணியினை அங்கீகரிக்கும் விதமாகவும், ஊக்கப்படுத்தும் விதமாகவும், தமிழ்நாடு காவல் துறையில் பணியாற்றி வரும் இரண்டாம் நிலைக் காவலர் முதல் ஆய்வாளர் வரையிலான  1 இலட்சத்து 17 ஆயிரத்து 184 காவல் துறையினருக்கு,ரூபாய் …

கொரோனா காலத்தில் களப்பணியாற்றிவரும் காவலர்களுக்கு ரூ.58 கோடி ஊக்கத் தொகை அறிவித்தார் மு.க.ஸ்டாலின் Read More

பிரதமர் மோடியை சந்தித்தது மன நிறைவான சந்திப்பாக இருந்தது – முதல்வர் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாட்டில் நடந்து  முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற்று ஆட்சியை அமைத்திருக்கிறது, புதிய அமைச்சரவை என்னுடைய தலைமையில் அமைந்திருக்கிறது. தமிழ்நாட்டினுடைய முதலமைச்சராக பொறுப்பேற்றதற்குப் பிறகு, முதன்முதலில் டெல்லி தலைநகருக்கு நான் வந்திருக்கிறேன். இந்த மாலை நேரத்தில் இங்கு …

பிரதமர் மோடியை சந்தித்தது மன நிறைவான சந்திப்பாக இருந்தது – முதல்வர் மு.க.ஸ்டாலின் Read More

டெல்டா பிளஸ்’ என்ற புதிய மாறுபட்டகொரோனா, கவலையளிக்க கூடியதாக இன்னும்வகைப்படுத்தப்படவில்லை

இந்தியாவுக்கு வெளியே புதிதாக கண்டறியப்பட்டுள்ள‘டெல்டா பிளஸ்’ என்ற மாறுபட்ட கொரோனா, கவலையளிக்கக் கூடியதாக இன்னும் வகைப்படுத்தவில்லைஎன  நிதி ஆயோக் உறுப்பினர்(சுகாதாரம்) டாக்டர் வி.கே. பால் கூறியுள்ளார். இது குறித்து தில்லியில் உள்ள பத்திரிகை தகவல்அலுவகத்தின் தேசிய ஊடக மையத்தில் இந்த வாரதொடக்கத்தில் அளித்த பேட்டியில் டாக்டர் வி.கே.பால்கூறியதாவது: ‘டெல்டா பிளஸ்’ என்ற புதிய மாறுபட்ட கொரோன வகைகண்டறிப்பட்டுள்ளது. இதன் தற்போதைய நிலவரம், புதிதாககண்டறியப்பட்ட வைரஸ் (Variant of Interest (VoI)).   இதுகவலையளிக்க கூடியதாக Variant of Concern (VoC).  இன்னும் வகைப்படுத்தப்படவில்லை. கவலையளிக்கக்கூடிய வகை என்றால், பரவும் வேகம் தீவிரமாக இருக்கும். இப்போதைக்கு ‘டெல்டா பிளஸ்’ கொரோனாவின் தன்மைபற்றி எங்களுக்கு தெரியாது. இந்த மாறுபட்ட கொரோனா நம் நாட்டில் இருக்கிறதாஎன்பதை கண்காணித்து, அதற்கேற்ப சுகாதாரநடவடிக்கைகளை எடுப்பதுதான் நாம் மேற்கொள்ளவேண்டிய வழி. இந்த மாற்றத்தின் விளைவை நாம் அறிவியல்பூர்வமாக கண்காணிக்க வேண்டும். இந்த மாறுபட்ட வகைகொரோனா நம் நாட்டுக்கு வெளியே கண்டறிப்பட்டுள்ளது.  இதன் மரபியல் குறித்து ஆராயும் இந்திய கொவிட்கூட்டமைப்பு(இன்சாகாக்) மூலம் கண்காணிக்க வேண்டும்.  இதுதான், இந்த அமைப்பில் உள்ள 28 ஆய்வு மையங்களின்எதிர்காலப் பணி.  இந்த அமைப்பு இதை தொடர்ச்சியாககண்காணித்து ஆய்வு செய்யும். இந்த மாறுபட்ட கொரோனா, கட்டுப்பாடு நடவடிக்கைகள், பழக்கவழக்கங்கள் ஆகியவற்றின் முக்கியத்துவத்தைநமக்கு நினைவுபடுத்துகிறது. இந்த மாறுபட்ட கொரோனாவை, எந்த ஆயுதம் கொண்டும்அழிக்க முடியாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இதை கண்காணித்து, அதன் தன்மையை புரிந்து கொண்டு, அதற்கேற்ற தடுப்பு நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ளவேண்டும். இதில் கொவிட் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள், கொவிட் தடுப்பு நடவடிக்கைகளின் அதே விதிமுறைகளும்அடங்கியுள்ளன. கொவிட் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுவதன் மூலம், எந்த வகை மாறுபட்ட கொரேனாவையும் சமாளிக்க முடியும். தொற்றுக்கு அடிப்படை காரணம், பரவல் சங்கிலிதான். இந்த பரவல் சங்கிலியை நாம் முறித்துவிட்டால், எந்த வகைமாறுபட்ட கொரோனா பரவலையும், நம்மால் கட்டுப்படுத்தமுடியும். இவ்வாறு டாக்டர் வி.கே.பால் கூறினார்.

டெல்டா பிளஸ்’ என்ற புதிய மாறுபட்டகொரோனா, கவலையளிக்க கூடியதாக இன்னும்வகைப்படுத்தப்படவில்லை Read More

டில்லிக்கான தமிழகரசின் சிறப்பு பிரதிநியாக விஜயன் பொறுப்பேற்றார்

தமிழ்நாடு அரசின் புது டில்லிக்காண சிறப்பு பிரதிநிதி ஏ.கே எஸ். விஜயன் அமைச்சர் துரை முருகன்  முன்னிலையில் புதுடில்லி வைகை தமிழ்நாடு இல்லத்தில் அமைந்துள்ள சிறப்பு சிறப்பு பிரதிநிதியின் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார். அவ்வமயம் மாண்புமிகு பாராளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் தயாநிதி மாறன், செந்தில்குமார், சுமதி என்ற தமிழச்சி தங்கபாண்டியன்  T.R.V.S.ரமேஷ், பொன் …

டில்லிக்கான தமிழகரசின் சிறப்பு பிரதிநியாக விஜயன் பொறுப்பேற்றார் Read More

கொரோனா தொற்று அதிகமுள்ள11 மாவட்டங்களில் 21ஆம் தேதி வரை இலவச உணவு பொட்டலங்கள் வழங்கப்படுமென அமைச்சர் பி கே சேகர்பாபு அறிவித்தார்

தமிழ்நாட்டில் கொரோனா பெருந்தொற்றுகாரணமாக பெரும்பாலான ஏழை எளிய மக்கள் தங்களது வாழ்வாதாரத்தினை இழந்து அன்றாடவாழ்க்கைக்கு போராடி வரும் நிலையில் அவர்களதுபசியினை போக்கும் விதமாகவும், அரசுமருத்துவமனைகளில் கொரோனா பெருந்தொற்றுகாரணமாக அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகள், அவர்களின் உதவியாளர்கள் மற்றும் உணவு தேவைப்படும்நபர்களுக்கு 12.05.2021 அன்று முதல் 14.06.21 வரைநாள்தோறும் ஒரு இலட்சம் உணவுப் பொட்டலங்கள்திருக்கோயில்கள் மூலம் வழங்கிடுமாறு மாண்புமிகுமுதலமைச்சர் வழிகாட்டுதல் படி, ஆணையிடப்பட்டுஉணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டு வந்தன. ​ இதற்கான போதிய நிதி வசதி இல்லாததிருக்கோயில்களுக்கு இந்து சமய அறநிலையத்துறைஆணையர் அலுவலகத்தில் பேணப்பட்டு வரும்அன்னதான மைய நிதியில் இருந்து வழங்கப்படுகிறது.தற்போது கொரோனா நோய் தொற்று அதிகமுள்ள 11 மாவட்டங்களுக்கு மட்டும் 14.06.2021 முதல் 21.06.2021 வரை சில கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்குநீட்டிக்கப்பட்டுள்ளது.  இக்கால கட்டத்திலும் திருக்கோயில்கள் வாயிலாக 11 மாவட்டங்களின்மருத்துவ மனைகளில் உள்ள நோயாளிகள் உள்ளிட்டஉணவு தேவைப்படும் நபர்களுக்கு 21.06.2021 வரைதொடர்ந்து வழங்கிட ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளதுஎன்பதனையும், இதற்கான கூடுதல் நிதி தேவைப்படும்திருக்கோயில்களுக்கு அன்னதான திட்ட மையநிதியிலிருந்து வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளதையும்நிறைந்த மனதுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

கொரோனா தொற்று அதிகமுள்ள11 மாவட்டங்களில் 21ஆம் தேதி வரை இலவச உணவு பொட்டலங்கள் வழங்கப்படுமென அமைச்சர் பி கே சேகர்பாபு அறிவித்தார் Read More

“நூற்றாண்டு காணும் தி.ஜானகிராமனின்படைப்புகள் காலத்தை வென்று வாழும்திறனுடையவை” – முதல்வர் மு.க.ஸ்டாலின்புகழாரம்

15.06.2021, செவ்வாய்க்கிழமை, மாலை 6 மணிக்கு, ஆழ்வார்பேட்டை சித்தரஞ்சன் சாலையிலுள்ளமுதலமைச்சரின் இல்லத்தில், முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள், எழுத்தாளர் தி.ஜானகிராமனின் நூற்றாண்டுநிறைவைக் (1921-2021)கொண்டாடும் ‘ஜானகிராமம்‘ என்ற நூலைவெளியிட்டார். அப்போது முதல்வர், “தமிழின்தலைசிறந்த எழுத்தாளர்களில் ஒருவர் தி.ஜானகிராமன். அவரது படைப்புகள் காலத்தை வென்று வாழும்திறனுடையவை. அவரது படைப்புகள்குறித்துப் பல்வேறுதுறையைச் சேர்ந்தவர்களால் எழுதப்பட்ட இந்நூலைவெளியிடுவதில் பெருமையடைகிறேன். தி.ஜானகிராமன்நூற்றாண்டு விழாவை முன்னெடுக்கும் அனைவர்க்கும்எனது நன்றிகள்“ என்று குறிப்பிட்டார். ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில், மன்னார்குடிக்குஅருகிலுள்ள ‘தேவங்குடி’ என்ற ஒரு சிறிய கிராமத்தில், தியாகராஜ சாஸ்திரி – நாகலட்சுமி ஆகியோரின்இரண்டாம் மகனாக, 28.06.1921இல்பிறந்த தி.ஜானகிராமன், தமிழின் மகத்தானகலைஞர்களுள் ஒருவர். தி.ஜானகிராமன் மறைந்து(18.11.1982) முப்பத்தொன்பது ஆண்டுகளாகிவிட்டபிறகும், நவீனத் தமிழிலக்கியத்தில் அவர் புகழ்இன்றும் ஓங்கியே இருக்கிறது. அவருடையபுனைகதைகள், தமிழ் வாசகர்களால் இன்றும் விரும்பிவாசிக்கப்படுகின்றன. அகில இந்திய வானொலியின்கல்வி ஒலிபரப்பு அமைப்பாளராகப் பணியாற்றிஓய்வுபெற்ற தி.ஜானகிராமன், தஞ்சாவூர் மாவட்டமக்களின் வாழ்வியலைக் கலைத்திறத்துடன் தம்படைப்புகளில் பதிவுசெய்த ஒரு முன்னோடிஎழுத்தாளராவார். அவர் எழுத்தில் காவிரியும் இசையும்தஞ்சை மண்ணின் இயற்கை வளமும் டெல்டாமனிதர்களின் வாழ்வியல் கோலங்களும் நுட்பமாகப்பதிவுபெற்றுள்ளன. சாகித்திய அகாதமிவிருது (1979) பெற்ற அமரர் தி.ஜானகிராமனின்(28.06.2021) நூற்றாண்டு நிறைவைச் சிறப்பிக்கும்நோக்கில், தி.ஜா. ஆய்வாளர் கல்யாணராமன், பல்வேறுஎழுத்தாளர்களிடமிருந்து தி.ஜானகிராமனின்படைப்புகளைப் பற்றிய (102) கட்டுரைகளைப்பெற்று, ‘ஜானகிராமம்‘ என்றதலைப்பில், 1032 பக்கங்களில் ஒரு பெருநூலைத்தொகுத்துள்ளார். இந்நூலைக் ‘காலச்சுவடு‘ பதிப்பகம் வெளியிட்டுள்ளது.15.06.2021 செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்குமுதலமைச்சரின் இல்லத்தில் நடைபெற்ற நிகழ்வில், மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள்வெளியிட, ‘ஜானகிராமம்‘ நூலின் முதல் பிரதியைத்தி.ஜானகிராமனின் மகள் உமாசங்கரியின் சார்பாக, ‘விப்ராஸ் ஆட்ஸ்’ நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்திருமதி கெஜலக்ஷ்மி ரகு பெற்றுக்கொண்டார். இந்நிகழ்வில், இந்நூலின்தொகுப்பாசிரியர் கல்யாணராமன், நந்தனம் கல்லூரித்தமிழ்த்துறைப் பேராசிரியர் முனைவர் சீதாபதி ரகு, கிண்டி செல்லம்மாள் மகளிர் கல்லூரித் தமிழ்த்துறைப்பேராசிரியர் முனைவர் தா.அ.சிரிஷாராமன், பத்திரிகையாளர் சுந்தரபுத்தன் ஆகியோர் பங்கேற்றனர்.

“நூற்றாண்டு காணும் தி.ஜானகிராமனின்படைப்புகள் காலத்தை வென்று வாழும்திறனுடையவை” – முதல்வர் மு.க.ஸ்டாலின்புகழாரம் Read More