உலகம் போற்றும் வகையில் சமீபத்தில் சிம்பொனி இசை விருந்து படைத்த பண்ணைபுரம் தந்த இளையராஜாவுக்கு தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் சிறப்பு கவுரவம் செய்யப்பட்டது. இதற்காக வடபழனி முருகன் கோயிலில் இளையராஜா பெயரில் சிறப்பு அர்ச்சனை செய்து கோயில் பிரசாதமும், சங்கம் சார்பில் அழகிய நினைவு பரிசையும் தலைவர் கவிதா, செயலாளர் கோடங்கி ஆபிரகாம், பொருளாளர் ஒற்றன் துரை, துணைத் தலைவர் பரத் உள்ளிட்ட நிர்வாகிகள் இளையராஜாவை சந்தித்து வழங்கி, “விரைவில் பாரத ரத்னா விருது கிடைக்க வேண்டும்” என்று வாழ்த்துகளை தெரிவித்த போது, அதைக் கேட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வழக்கமான சிரிப்பை பதிலாக தந்தார் இளையராஜா.
இளையராஜாவுக்கு விரைவில் பாரத ரத்னா விருது கிடைக்க வாழ்த்திய தமிழ் திரைப்பட சங்க நிர்வாகிகள்
