மேலப்பாளையத்தில் தமுமுக மற்றும் நாகர்கோவில் கிம்ஸ் மருத்துவமனை இணைந்து நடத்திய மாபெரும் இலவச பொது மற்றும் சுவாச நோய் மருத்துவ முகாம்

26.10.2025 ஞாயிறு அன்று காலை 10 மணி முதல் மதியம் 1.30 மணி வரை மேலப்பாளையம் KSR மாநகராட்சி திருமண மண்டபத்தில் வைத்து நடைபெற்றது. முகாமிற்கு மாவட்ட மருத்துவ சேவை செயலாளர் குதா முகம்மது தலைமை தாங்கினார்.  மாவட்ட தலைவரும் மாமன்ற உறுப்பினருமான K.S.ரசூல்மைதீன் அவர்கள் முகாமை துவங்கி வைத்தார். மேலப்பாளையம் பகுதி தமுமுக தலைவர் யூசுப் சுல்தான்,  செயலாளர்கள் E.M.அப்துல் காதர், A.R. பாதுஷா, பொருளாளர் அசன் மைதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  முகாமில் சுவாச கோளாறு சிகிச்சை மற்றும் சுவாச குழாய் பரிசோதனை, ரத்த அழுத்தம், ரத்த அளவு பரிசோதனை, சர்க்கரை அளவு மற்றும் பொது மருத்துவம் ஆகியவை மருத்துவர்கள் திலீப் குமார், சிவபாலு அடங்கிய மருத்துவக் குழுவினர் முகாமில் கலந்து கொண்ட மருத்துவப் பயனாளிகளுக்கு சிகிச்சை அளித்தனர்.  நாகர்கோவில் கிம்ஸ மருத்துவமனை பொதுமேலாளர் முரளி, ஒருங்கிணைப்பாளர் அருணாசலம் ஆகியோர் முகாமை ஒருங்கிணைத்தனர். இம்முகாமில் மமக மாவட்ட செயலாளர் ரியாசூர் ரஹ்மான், தமுமுக மாவட்ட பொருளாளர் தேயிலை மைதீன், மருத்துவ சேவை அணி மாநில துணை செயலாளர் பெஸ்ட் ரசூல், ஐ. பி. பி. மாநில துணைச் செயலாளர் அபுல்காசிம் பிர்தவ்ஷி, மாவட்ட துணைச் செயலாளர் அ.காஜா, ஐ.பி.பி. மண்டல செயலாளர் நாமியா அசன்,மாவட்ட வர்த்தக அணி செயலாளர் சேக் மதார் , வர்த்தகர் அணி பொருளாளர் ராஜா முகம்மது இளைஞர் அணி செயலாளர் அஜ்மல் கான்,ஐ பி பி மாவட்டச் செயலாளர் அப்துல் அஜீஸ், மாவட்ட பொருளாளர் பிஸ்கட் சுல்தான், ஊடக அணி மாவட்ட செயலாளர் செய்யது அப்துல் காதர், பொருளாளர் அப்பாஸ், பகுதி துணை செயலாளர்கள் மகபூப்ஜான், பெயின்டர் இஸ்மாயில்,  46வது வார்டு தலைவர் ராகத் செய்யது அலி, 52வது வார்டு செயலாளர் சிராஜ் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர் இம்முகாமில் பொது மருத்துவம், சுவாசக் கோளாறு, இரத்த அழுத்தம், நீரிழிவு பரிசோதனை, நுரையீரல் செயல்பாடு பரிசோதனை மற்றும் இ சி ஜி பரிசோதனை ஆகிய சிகிச்சைகள்நூற்றுக்கணக்கான மருத்துவ பயனாளிகளுக்கு இலவசமாக  வழங்கப்பட்டது .