புதிய பாதையில் பயணித்த படம் “கெனத்தக் காணோம்” – யோகிபாபு

நகைச்சுவை வேடங்களில் ரசிகர்களை சிரிக்க வைத்தாலும், வலுவான கதாநாயகன் கதாபாத்திரங்களிலும் யோகிபாபு  தன்னுடைய திறமையை நிரூபித்து வருகிறார். அவரது சமீபத்திய படம் “கெணத்த காணோம்” விமர்சகர்கள் ரசிகர்களின் பாராட்டில், வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இதுகுறித்து யோகி பாபு கூறுகையில்: “இந்தத் தருணம் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும், அதே நேரத்தில் ஒரு விதமான துயரத்தையும் தருகிறது. இயக்குநர் சுரேஷ் சங்கையா அவர்கள் இந்த வெற்றியை நேரில் காண முடியாமல் இருப்பது என்னை வேதனைப்படுத்துகிறது. ஆனால், அவரின் நோக்கம் ‘கெணத்த காணோம்’ படத்தில் என்றென்றும் உயிருடன் இருக்கும். இந்த வாய்ப்பை எனக்கு அளித்ததற்காக அவருக்கு என் மனமார்ந்த நன்றி. இதயம் தொடும் இப்படத்தை உருவாக்கிய படக் குழுவிற்கும் என் நன்றிகள். இப்படம் நகைச்சுவையைத் தாண்டி புதிய பாதையில் செல்ல என்னை ஊக்குவித்தது. இந்த வெற்றி, இனியும் இப்படிப்பட்ட அர்த்தமுள்ள திரைப்படங்களை வழங்க என்னை மேலும் உற்சாகப்படுத்துகிறது.” என்றார்