“திமுக கூட்டணியில் போட்டியிட விரும்பவில்லை – நிபந்தனையற்ற ஆதரவு தருகிறோம்” கமல்ஹாசன் அறிவிப்பு

மக்கள் நீதி மய்யம் கட்சியின் அடியாளச் சின்னமான “பேட்டரி டார்ச்” சின்னத்தில் போட்டியிடத்தான் ஏற்புடையதே தவிர, உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடுவது ஏற்படையதல்ல என்று அக்கட்சியின் நிறுவனத்தலைவர் கமல் ஹாசன் அறிவித்துள்ளார். ஆனாலும் திமுகாவிற்கு நிபந்தனையற்ற ஆதரவு தருகிறோம் என்றும் கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், மக்கள் நீதி மய்யம் கட்சியானது 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில், எங்களின் அடையாளமான பேட்டரி டார்ச் சின்னத்தில் போட்டியிடுவது என்று முடிவு எட்டப்பட்டுள்ளதாக தெரிவித்த கமல்ஹாசன், வரும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி நேரடியாகப் போட்டியிடவில்லை என்றும் தெரிவித்துள்ளார். ஆனாலும் தமிழ்நாட்டை மதவாத சக்திகள் கைப்பற்றிவிட சகல வழிகளிலும் சூழ்ச்சி செய்துகொண்டிருக்கும் சூழலில் கூட்டணியின் ஒட்டுமொத்த வெற்றி வாய்ப்பே முதன்மையானது என்று கூறிய அவர், முடிவாக திமுக தலைமையிலான கூட்டணியின் வேட்பாளர்களை நிபந்தனையின்றி ஆதரிப்பது என முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இது தியாகம் அல்ல; கடமை. சுய நலம் அல்ல; பொறுமை. அரசியல் களத்தில் தேர்தல் ஒரு பகுதிதான். அதுவே இறுதி என்று ஆகாது, முற்றுப்புள்ளி என்பதும் கிடையாது. இந்த முடிவு உங்கள் உணர்வுக்கும், உங்கள் நம்பிக்கைக்கும் நான் செலுத்தும் மரியாதையாக கருதுகிறேன். என்றும் கூறியுள்ளார்.