கிண்ணியா 24, மே:- கொரோணா தொற்றாளர்களுக்கான சிகிச்சை அளிக்கும் வகையில் தனிமைப்படுத்தல் நிலையம் மற்றும் HDU ஆரம்பிப்பபதை விரைவு படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதை பார்வையிட்டார் திருகோணமலை நாடாளுமன்ற உறுப்பினர் தௌபீக் முகமது ஷெரிஃப்.
இதற்காக ஏற்கனவே தெரிவு செய்யப்பட்ட இடங்களில் கிண்ணியா பிரதேச சபைத் தவிசாளர் கௌரவ நிஹார் தலைமையில் வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது. மேலும் வேலைகளை துரிதப்படுத்துவதற்கும் HDU ஐயும் அமைப்பதற்கான ஆலோசனைகளும் நடைபெற்றது. எதிர் வரும் திங்கட்கிழமை இவைகளை நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இச்சந்திப்பின் போது கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர். தௌபீக், பிரதேச சபைத் தவிசாளர் கௌரவ நிஹார், கிண்ணியா தள வைத்தியசாலை பொறுப்பதிகாரி டாக்டர். ஜிப்ரி, கிண்ணியா வைத்தியசாலையின் டாக்டர். பதினி குகசீலன், டாக்டர். சமீம், ஆயுர்வேத வைத்தியர் மாசாத், பிரதேச செயலாளர் கனி, உதவி திட்டமிடல் பணிப்பாளர் றியாத், பிரதேச செயலக உத்தியோகத்தர் ஹாதி மற்றும் தாதியர்கள் கலந்து கொண்டனர்.