‘சினெர்ஜிக்’ ஆர்கிடெக் அலுவலகம் திறப்பு விழா!

தாம்பரம், ஜனவரி 10: செங்கல்பட்டு மாவட்டம்,
கிழக்கு தாம்பரத்தில் ‘சினெர்ஜிக்’ ஆர்கிடெக் நிறுவனத்தை, ‘நேசஷனல் பூட்ஸ்’ அதிபர் குத்தாலம் ஏ. லியாகத் அலி திறந்து வைத்தார். விழாவில், தங்கம் குழுமத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் ஷேக்மைதீன் தங்கம், பங்குதாரர் மற்றும் இணை நிர்வாக இயக்குனர் அப்துல்சலாம் தங்கம், சிங்கப்பூர் தொழிலதிபர் அலீம், துபாய் தொழிலதிபர் கலந்தர்,

திருமங்கலக்குடி ‘அஸ்ஸாம்’ பொறியில் கல்லுரித் தாளாளர் ஜமால் முகமது இப்ராஹிம், ஆடுதுறை ‘ரைஸ் சிட்டி’ பள்ளியின் நிர்வாக இயக்குனர் ஜமால் முகமது யாஸ்மின், முகமது இலியாஸ், திருச்சி ஆடிட்டர் முகமது அஸ்கர், காண்ட்ராக்டர் வெங்கட கிருஷ்ணன், டாக்டர். ஜமால் முகமது அமீஸ், ஆர்கிடெக். ஜமால் முகமது தமீஷ் மற்றும் பலர் கலந்துக் கொண்டனர்.