விக்டரி வெங்கடேஷ், நந்தமூரி கல்யாண் ராம் மற்றும் அனில் ரவிபுடி இணையும் முழுநீள கொண்டாட்ட பொழுதுபோக்கு திரைப்படம் தற்போது உருவாகி வருகிறது. ஷைன் ஸ்கிரீன்ஸ் நிறுவனத்தின் சார்பில் சாஹு கரபாட்டி தயாரிக்கும் இந்தப் படத்தை, சுரேஷ் புரொடக்ஷன்ஸ், சுமதி. அர்ச்சனா மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் வழங்குகின்றன. கீர்த்தி சுரேஷ் மற்றும் கிருத்தி ஷெட்டி கதாநாயகிகளாக நடிக்கின்றனர். தயாரிப்பாளர்கள் தில் ராஜு மற்றும் ஷிரிஷ் ஆகியோர், இயக்குநர் அனில் ரவிபுடி மற்றும் தயாரிப்பாளர் சாஹு கரபாட்டியிடம் திரைக்கதையை வழங்கி நிகழ்வை தொடங்கி வைத்தனர். முஹூர்த்த காட்சிக்காக, விக்டரி வெங்கடேஷ், கல்யாண் ராம், கீர்த்தி சுரேஷ் மற்றும் கிருத்தி ஷெட்டி இடம்பெற்ற முதல் காட்சிக்கு அல்லு அரவிந்த் கிளாப் அடித்தார். சுரேஷ் பாபு கேமராவை இயக்கி வைத்தார். புகழ்பெற்ற இயக்குநர் கே. ராகவேந்திர ராவ் முதல் காட்சியை இயக்கினார்.*******
நடிகர்கள்: விக்டரி வெங்கடேஷ், நந்தமூரி கல்யாண் ராம், கீர்த்தி சுரேஷ், கிருத்தி ஷெட்டி தொழில்நுட்பக் குழு: கதை, இயக்கம்:அனில் ராவிபூடி தயாரிப்பாளர்:சாஹு காரபாட்டி வழங்குபவர்கள்: சுரேஷ் புரொடக்ஷன்ஸ், ஜீ ஸ்டூடியோஸ், சுமதி. அர்ச்சனா இசை: G.V பிரகாஷ் குமார் நிர்வாக தயாரிப்பாளர்: S.கிருஷ்ணா ஒளிப்பதிவாளர்: சமீர் ரெட்டி படத்தொகுப்பு: தம்மிராஜு கலை இயக்குநர்: A.S. பிரகாஷ் மக்கள் தொடர்பு – யுவராஜ் மார்க்கெட்டிங்: ஹாஷ்டேக் மீடியா

