“பீப்” திரைப்பட விமர்சனம்

கல்.ஆர் கணேஷன் தயாரிப்பில், எல்.சண்முக சுந்தர் இயக்கத்தில், ராகவ், யாமினி லட்சுமணன், பிரேர்னா கண்ணா, ஐடிஐ. ஆச்சார்யா, அருண் மோகன், ஷ்ரவன் ராமகிருஷ்ணன், ஜூஹி சர்மா, நிதிஷ், பாலாஜி, ராஜவேல், அதுல், ஜி. சிவகுமார், வெங்கட் ரமேஷ், கல் ஆர் .கணேசன், எல் . சண்முகசுந்தர் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த்கிருக்கும் படம் “பீப்”. ராகவ் விஞ்ஞானத்தில் அறிவாளியாக இருக்கிறார். ஒரு நிழல் படத்தை பார்த்து அதன் பின்னணி என்ன  என்பதை கண்டுபிடித்து விடுவார். இயற்கையிலேயே அப்படி ஒரு ஆற்றல் படைத்தவர்.  அவருக்கு யாமினியின் நட்பு கிடைக்கிறது. அவருடன் ராகவ் நெருக்கமாக பழகிவருகிறார். ஒருநாள் அடுக்குமாடி குடியிறுப்பின் மூன்றாவது மாடியிலிருந்து கீழே விழுந்து யாமினி இறந்து விடுகிறார். இது கொலையா? அல்லது தற்கொலையா? என்ற விசாரணையில் காவல்துறையினரும் ராகவும் துப்புதுலக்க களத்தில் இறங்குகிறார்கள். இதில் யார் வெற்றி பெற்றார்கள் என்பதுதான் “பீப்” படத்தின் கதை.

ராகவ், அதீத ஆற்றல் பெற்றவராக நடிப்பதில் தேர்ச்சி பெற்றிருக்கிறார். கதாபாத்திரத்துக்கு ஏற்ற உடல்மொழியை வழங்கியிருக்கிறார். அவரது புலனாய்வுப் பயணம் படம் பார்ப்பவர்களையும் அவருடன் பயணிக்க வைக்கிறது. அடுக்குமாடிக் கட்டடங்களில் ஏறி துப்பு துலக்கும் காட்சியில் அவரது கடின உழைப்பை காணமுடிகிறது.  யாமினி லக்‌ஷ்மணன் கவர்ச்சி உடைகளில் தோன்றி இளங்காளைகளின் நெஞ்சில் நிறைந்திருக்கிறார்.  மழ மழ முகத்தை வைத்துக்கொண்டு அதிர வைக்கும் காரியங்களைச் செய்யும் படத்தின் இயக்குநர் எல்.சண்முக சுந்தரம், பேராடிரியர் கதாபாத்திரத்துக்கு கனகச்சிதமாக பொருந்தியிருக்கிறார். ஐடிஐ ஆச்சார்யா, பிரேர்னா கண்ணா, அருண் மோகன், ஷ்ரவண் ராமகிருஷ்ணன், ஜுஹி சர்மா, நித்திஷ், பாலாஜி ஆகிய துணை நடிகர்கள் புதுமுகங்களாக இருந்தாலும் நடிப்பில் தேர்ச்சி பெற்றவர்களாக இருப்பது படத்க்துக்கு கூடுதல் பலத்தை தருகிறது.  பிரதீப் பத்ம குமாரின் ஒளிப்பதிவும், பிரசாந்த் விஹாரியின் இசையும் கதைக்களத்தில் துணையாக நின்று  அபிஷேக் மற்றும் விக்னேஷின் படத்தொகுப்புக்கு வலு சேர்க்கின்றன. படத்தின் முதல் பாதியில் கவர்ச்சிக்கு முக்கியதுவம் கொடுத்த இயக்குநர் சண்முக சுந்தரம் இரண்டாம் பாதியில் புலனாய்வுக்கு முக்கியத்துவம் கொடுத்து இயக்கியிருப்பது பாராட்டுதலுக்குறியது.