முதல்வரிடம் வாழ்த்துப்பெற்ற புதிய கழக செயலாளர்கள்

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் 29.7.2020 அன்று திருப்பத்தூர் மாவட்டக் கழகச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத்துறை அமைச்சர் வீரமணி நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழ் நாடு முதலமைச்சருமான எடப்பாடி மு. பழனிசாமியை அவரது இல்லத்தில் 29.7.2020 அன்று கழக அமைப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் இராமச்சந்திரன் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.