சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ஒய்.ஜி.மகேந்திரன், சுகாசினி மணிரத்னம், ராஜ் ஐயப்பா, ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ், சமுத்திரக்கனி, தலைவாசல் விஜய், மதுவந்தி, தீனா ரித்விக், பிரித்திகா ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “சாருகேசி”. ஒய்.ஜி.மகேந்திரன் புகழ்மிக்க சங்கீத வித்வான். அவரது மனைவி சுகாசினி பாசமிகுந்த குடும்பத்தலைவன், இவர்களது மகன் ராஜ் ஐயப்பா பொறுப்பற்ற மகன். மகனின் மனைவி அடக்கியாளும் குணங்கொண்ட ரம்யா கிருஷ்ணன். இவ்வாறு இருக்கையிக் திடீரென ஒய்.ஜி.மகேந்திரனுக்கு ஞாபக மறதி நோய் வந்துவிடுகிறது. மனைவி சுகாசினியை பார்த்து “யார் நீ” என்று கேட்குமளவுக்கு மறதி நோய் முற்றியிருக்கிறது. அவருக்கு ஞாபக மறதி நோய் வர காரணம் என்ன?. அந்த நோயிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா?. என்பது மீதிக் கதை. ஓய் ஜி மகேந்திரான் தனது தேர்ந்த அனுபவத்தை நடிப்பில் வார்த்துள்ளார். “வந்து போவதே நம் வேலை..வழி நடத்துவது அவன் லீலை” என்ற வரிகளை அவர் பாடுகையில் படம் பார்ப்பவர்களின் மனம் உருகிப்போய்விடுகிறது. சமுத்திரக்கனி, சத்யராஜ் இருவரும் சிறப்பு அழைப்பாளர்களாக வந்து தங்களது உன்னத நடிப்பை கொடுத்துள்ளனர். சுஹாசினி தலைவாசல் விஜய் இருவரும் கொடுத்த வேலையைச் செய்துள்ளனர். ரம்யா பாண்டியன் நடிப்பும், படத்தில் கர்நாடிக் இசை பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. தேவா தேனிசையை தந்துள்ளார். சஞ்சய் தனது ஒளிப்பதிவில் சிக்கனத்தை தந்துள்ளார். பா.விஜய் வசனங்களையும் பாடல்களையும் எழுதியுள்ளார். சுரேஷ் கிருஷ்ணா இன்றைய தலைமுறைக்கு நம் தாய் தந்தையரின் வாழ்க்கையை கற்றுக்கொள்வதும் தெரிந்து கொள்வதும் எவ்வளவு முக்கியம் என்பதைச் சொல்லியுள்ளார். ஒரு குடும்பத்தலைவி எப்படி இருக்க வேண்டும் என்பதை திரையில் ஓவியமாக தீட்டியிருக்கிறார் சுகாசினி. வாழ்க்கையில் எப்படி நடந்துகொள்ள கூடாது என்பதை ராஜ் ஐயப்பாவும் ரம்யா கிருஷ்ணனும் தனது தேர்ந்த நடிப்பால் விளக்கியுள்ளார்கள். படத்த்கின் முக்கிய திருப்பங்களுக்கு சத்யராஜும் சமுத்ரகனியும் பெரும் பங்காற்றியுள்ளார்கள்.
“சாருகேசி” திரைப்பட விமர்சனம்
