“7 ஸ்டார் பாய்ஸ்” திரைப்பட விமர்சனம்

டி.அசோக் தயாரிப்பில் நிகில் பிரேம்ராஜ் இயக்கத்தில் ஆண்டனி வர்க்கீஸ், ஐ.எம்.விஜயன், ஜுமானா அப்துல் ரஹ்மான், லுக்மான் அவரான், பாலு வர்க்கீஸ், தனிஷ் பி.கே, அமல், பாசித் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “7 ஸ்டார் பாய்ஸ்”. திருநெல்வேலியில் பெரும் செல்வந்தராக இருக்கும் ராவுத்தர் மகள் ஜுமானாவின் நிச்சயதார்த்த நிகழ்வு நடந்து கொண்டிருக்கிறது. அவ்வீட்டுக்குள் ஆண்டனி வர்க்கீஷ் (இஸ்மாயில்) திருட்டுத்தனமாக நுழைகிறார். பிறகு பிடிபட்டு காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்படுகிறார். அதன் பிறகு பிணை விடுப்பிக் வெளியே வருகிறார். ஆண்டனி வர்க்கீஸ் ஏன் அவ்வீட்டுக்குள் திருடனாக நுழைந்தார் என்பது தனிக் கதை. இது இவ்வாறு இருக்க, அந்த கிராமத்தில் 7 ஏழைச் சிறுவர்கள் கால்பந்தாட்ட விளயாட்டில் மிகவும் ஆர்வம் கொண்டவர்கள். முறையாக பயிற்சி பெற்று மாநில அளவில் கால்பந்தாட்ட வீரர்களாக ஜொலிக்க வேண்டும் என்பது அந்த சிறுவர்களின் லட்சியமாக இருக்கிறது. அதற்கு ஆண்டனி வர்க்கீசும் பிரபல கால்பந்தாட்ட வீரர் விஜயனும் முன்வந்து உதவுகிறார்கள். இருப்பினும் அந்த 7 சிறுவர்களுக்கும் பல இடையூர்கள் வருகின்றன. அந்த இடையூர்களை எல்லாம் தகர்த்து வெற்றி பெற்றார்களா? இல்லையா? என்பதுதான் கதை.

அந்த 7 சிறுவர்களும் தங்களது தனித்துவமான நடிப்பை வெளிக்காட்டி நடைத்திருப்பது மெய்சிலிர்க்க வைக்கிறது. குறிப்பாக உமர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சிறுபன் தனிஷ் பிரமாதப்படுத்துகிறார். அந்த ஏழு சிறுவர்களில் வயது குறைந்த கடைக்குட்டி சிறுவந்த்ஹான் இக்கதைக்கு நாயகனாக துள்ளிக் குதிக்கிறார். கூண்டுக்குள் கால்பந்தை எட்டி உதைத்து தள்ளும் காட்சியில் பார்வையாளர்களின் கைத்த்கட்டலை பெறுகிறார். எதிரணியினரின் காலுக்கு பந்தை சிக்கவிடாமல் நகர்த்தி, தன்காலாலேயே வெகுதொலைவிலிருந்து பந்தை கூண்டுக்குள் தள்ளும் காட்சி அருமை. ஆண்டனி வர்கீஸ் தனது கதாபாத்திரத்தை இயல்பாக செய்திருக்கிறார். பயிற்சியாளராக வரும் ஐ.எம். விஜயனும் சிறப்பு சேர்க்கிறார். இயக்குநர் நிகில் பிரேம்ராஜ், சிறுவர்களின் கால்பந்து கனவையும் போராட்டத்தையும் அழகாக பதிவு செய்திருக்கிறார். முதல் பாதி சற்று மெதுவாக நகர்ந்தாலும், இரண்டாம் பாதியில் போட்டி தொடங்கியதும் வேகம் பிடிக்கிறது. குறிப்பாக உச்சக்கட்ட கால்பந்து போட்டி காட்சிகள் விறுவிறுப்பை கூட்டுகின்றன. பயஸ் சித்திக்கின் ஒளிப்பதிவு கிராமத்து பின்னணியை அழகாக காட்ட, ஜேக்ஸ் பிஜாயின் பின்னணி இசை போட்டிக் காட்சிகளுக்கு கூடுதல் வலு சேர்க்கிறது. கால்பந்து, சிறுவர்களின் நட்பு, கனவு என எளிமையான கதையை உணர்வுப்பூர்வமாக சொல்லும் ‘7 ஸ்டார் பாய்ஸ்’ ரசிக்க வைக்கும் விளையாட்டு திரைப்படம். சிறுவர்களை குதூகலம் அடைய வைக்கிறது. பாடசாலை மாணவர்களுக்கு இப்படத்தை அரசு திரையிட்டுக் காட்ட வேண்டும்.