2. எம்.கே.பி.நகர் பகுதியில் உள்ள தனியார் வங்கியில் பின்பக்க ஜன்னலை உடைத்துஉள்ளே நுழைந்து திருட முயன்ற நேபாளத்தைச் சேர்ந்த 2 நபர்களை கைதுசெய்த சுற்றுக் காவல் ரோந்து வாகன காவல் குழுவினர். சென்னை, வியாசர்பாடி, எருக்கஞ்சேரி நெடுஞ்சாலையில் இயங்கி வரும் Jana Small Finance என்ற தனியார் வங்கியில் 19.12.2021 அன்று அதிகாலை சுமார் 04.00 மணி அளவில் மர்ம நபர்கள் சிலர்வங்கியில் புகுந்து திருட முயல்வதாக, சிசிடிவி கேமரா மூலம் ஐதராபத்திலுள்ள தலைமைஅலுவலகத்தில் கண்காணித்து, மேற்படி வங்கியின் மேலாளருக்கு தகவல் கொடுத்ததின்பேரில், வங்கிமேலாளர் தனது வங்கியின் Field Service Executiveயாக பணிபுரியும் திரு.முரளி என்பவருக்கு தகவல்கொடுத்துள்ளார். அதன்பேரில், முரளி சம்பவயிடத்திற்கு விரைந்து சென்று அருகில் பணியிலிருந்த P-5 எம்.கே.பி.நகர் ரோந்து காவல் வாகன பொறுப்பு/உதவி ஆய்வாளர் திரு.M.P.பெருமாள் மற்றும் வாகனஓட்டுநர்/முதல்நிலைக் காவலர் N.சுப்பிரமணி (மு.நி.கா.40112) ஆகியோருக்கு தகவல்கொடுத்துள்ளார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தபோது, வங்கியின் பின்புறமுள்ள கழிவறையின் ஜன்னலை உடைக்கப்பட்டு மர்ம நபர்கள் உள்ளே சென்றிருப்பதுதெரியவந்தது. உடனே காவல் குழுவினர் இருவரும் வங்கிக்குள் சென்றபோது, எதிரிகளில் ஒருவர்லேப்டாப்களுடன் தப்பியோடவே, காவல் குழுவினர் மற்றொரு எதிரி தாங் பகதூர், வ/40, த/பெ.போகன்பகதூர், மகேந்திரா நகர், நேபாளம் என்பவரை மடக்கிப் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர தேடுதலில் ஈடுபட்டு, தப்பியோடிய மற்றொருகுற்றவாளியான சாஹர்தமாய், வ/25, த/பெ.சந்திர பகதூர் தமாய், வசந்தலா கஞ்சன்பூர், நைஜி,நேபாளம் என்பவரை சில மணி நேரங்களில் கைது செய்தனர். அவரிடமிருந்து 2 லேப்டாப்கள் பறிமுதல்செய்யப்பட்டது. காவல் குழுவினரின் துரித நடவடிக்கையால் மேற்படி தனியார் வங்கியில் நடைபெறஇருந்த கொள்ளை தடுக்கப்பட்டது.
திருச்சி மாவட்டம், துறையூர், மருவத்தூர், கோட்டயம் தெருவில் வசித்து வரும் முரளிதரன், வ/29, த/பெ.வடிவேல் என்பவர் லாரி ஓட்டுநராக வேலை செய்து வருகிறார். முரளிதரன் 19.12.2021 அன்றுஅதிகாலை சுமார் 02.15 மணியளவில் மாதவரம், மஞ்சம்பாக்கம் பகுதியில் உள்ள KVT லாரி பார்க்கிங்அருகில் லாரியை நிறுத்திவிட்டு தூங்கி கொண்டிருந்த போது, அங்கு ஆட்டோவில் வந்த 4 நபர்கள்மேற்படி முரளிதரனிடம் கத்தியைக்காட்டி மிரட்டி அவர் அணிந்திருந்த 1/2 சவரன் தங்க மோதிரம், 1 கைக்கடிகாரம், 1 வெள்ளி கைச்செயின் மற்றும் 1 செல்போனை பறித்துக் கொண்டு, அவரைஆட்டோவில் ஏற்றிக்கொண்டு அருகில் உள்ள ATM மையத்திற்கு அழைத்துச் சென்று முரளிதரனின்ATM கார்டிலிருந்து பணம் ரூ.20,000/-ஐ எடுத்துக்கொண்டு இருந்த போது, அவ்வழியே ரோந்து சென்றM-1 மாதவரம் காவல் நிலைய ரோந்து வாகனத்தை பார்த்ததும், 4 எதிரிகளும் ஆட்டோவை அங்கேயேவிட்டு தப்பியோடினர். உடனே ரோந்து காவல் வாகன பணியிலிருந்த தலைமைக்காவலர்D.கார்த்திக்கேயன், (த.கா.36303) மற்றும் வாகன ஓட்டுநர்/ஆயுதப்படை முதல்நிலைக் காவலர்M.சுரேஷ்பாபு (மு.நி.கா.53219) ஆகியோர் சுதாரித்துக் கொண்டு துரத்திச்சென்று தப்பி ஓடிய நபர்களில்2 நபர்களை மடக்கிப்பிடித்தனர். உடனே, காவல் குழுவினர் கட்டுப்பாட்டறைக்கு தகவல் கொடுக்கவே, இரவு ரோந்து பணியிலிருந்த தலைமைக்காவலர் D.பழனிகுமார் (த.கா.43753), முதல்நிலைக்காவலர் K.தீர்த்தகிரி (மு.நி.கா.51671) மற்றும் காவலர் R.ரோவித் (கா.42754) ஆகியோர்தலைமறைவான குற்றவாளி ஒருவரை பிடித்து, M-1 மாதவரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். M-1 மாதவரம் காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர்விசாரணையில் பிடிபட்ட நபர்கள் 1.கோபிநாத், வ/28, த/பெ.துரை, எண்.5, கருமாரியம்மன் கோயில்தெரு, கொடுங்கையூர், சென்னை 2.மகேஷ்குமார், வ/23, த/பெ.நாகேந்திரன், எண்54, தென்றல் நகர், 3வது குறுக்கு தெரு, கொடுங்கையூர், சென்னை, 3.மணிகண்டன், வ/24, த/பெ.நாகேந்திரன், எண்.54, தென்றல் நகர், 3வது குறுக்குதெரு, கொடுங்கையூர், சென்னை என்பதும், லாரி ஓட்டுநர் முரளிதரனிடம்வழிப்பறியில் ஈடுபட்டதும் தெரியவந்தது. அவர்களிடமிருந்து 1/2 சவரன் எடையுள்ள 1 தங்க மோதிரம், 1 கைக்கடிகாரம், 1 வெள்ளி கைச்செயின், ரொக்கம் ரூ.20,000/-, 4 செல்போன்கள், 1 கத்திமற்றும் 1 ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது. தப்பியோடிய நேசமணி என்பவரை காவல் குழுவினர்தீவிரமாக தேடிவருகின்றனர். மேற்படி சம்பவங்களில் சிறப்பாக பணிபுரிந்து குற்றவாளிகளை கைது செய்த காவல்அதிகாரிகள், ஆளிநர்கள் மற்றும் தக்க சமயத்தில் போலீசாருக்கு தகவல் கொடுத்த தனியார் வங்கிField Service Executive திரு.D.முரளி ஆகியோரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர்திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் இன்று (04.01.2022) நேரில் அழைத்து வெகுமதி மற்றும்சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

