அட்லீ ரன்வீர் சிங் கூட்டணியில், ஸ்ரீலீலா பாபி தியோலின் “ஏஜெண்ட் ஜிங் அட்டாக்ஸ்”

ஜவான், பிகில், மெர்சல் போன்ற  படைப்புகளைத் தந்த  இயக்குநர் அட்லீ, தற்போது விளம்பர காம்பெயினாக உருவான சிங்க்ஸ் தேசி சைனீஸ் நிறுவனத்தின் “ஏஜெண்ட் ஜிங் அட்டாக்ஸ்” என்ற விளம்பரபடத்தின் மூலம் தனது விளம்பர அறிமுகத்தை நிகழ்த்தியுள்ளார். இந்த விளம்பரத்தில் சிங்ஸ் மாஸ்காட்டாக தோன்றியிருக்கும் ரன்வீர் சிங், முன்னணி நட்சத்திரங்களான ஸ்ரீலீலா மற்றும் பாபி தியோல் ஆகியோருடன் இணைந்து நடித்துள்ளார். இயக்குநர் அட்லியின் பிரத்தியேகமான சாயலில் இதுவரை காணாத அதிரடி காட்சிகள் என அனைத்தும் கலந்த இந்தப் படைப்பை,  ஒரு சிறந்த குழு இணைந்து, இணையத்ததையே வைரலாக கலக்கும்  அளவுக்கு உருவாக்கியுள்ளது.