அஸ்னா கிரியேஷன் நிறுவனம் சார்பில் சையத் தமீன் தயாரிப்பில், சந்தோஷ் ரயான் இயக்கத்தில், மாறுபட்ட களத்தில், இன்வஸ்டிகேசன் திரில்லர் டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம் “ஜஸ்டிஸ் ஃபார் ஜெனி”. இப்படத்தின் அறிமுக நிகழ்வில் இயக்குநர் கே.பாக்கியராஜ் பேசியதாவது: தயாரிப்பாளர் சதீஷ் படம் பார்த்ததாக சொன்னார். அவர் சமீபத்தில் செய்த படம் இந்திக்கு ரீமேக் ஆகிறது. இப்போதெல்லாம் மிகப்பெரிய வெற்றிப்படமாக இருந்தால் தான் ரீமேக் செய்கிறார்கள். அவர் படம் பார்த்து நன்றாக இருப்பதாக சொல்வது படத்திற்கு கிடைத்துள்ள பெரிய பாராட்டு. தயாரிப்பாளர் சையத், இயக்குநர் சந்தோஷ், மற்றும் படக்குழுவிற்கு என் வாழ்த்துக்கள். சந்தோஷ் என்னை அழைக்கும் போது, படத்தின் அவுட்லைன் சொன்னார், யாரிடமும் உதவியாளராக இல்லாமல் இருந்தாலும், மிகத் தெளிவாக கதை சொன்னார். அதிலேயே அவர் திறமை தெரிந்தது. இங்கு தயாரிப்பாளர் கதை சொன்னது இன்னும் அருமையாக இருந்தது. க்ரைம் சப்ஜெக்ட் எனக்கு மிகவும் பிடித்த சப்ஜெக்ட், நான் அதிகம் கரைம் ஆக்சன் படங்கள் தான் பார்ப்பேன்.********
முதல் படத்திலேயே சந்தோஷ் அருமையாக இதை எடுத்துள்ளார். இந்தப்படம் யார் நடித்திருக்கிறார் என்பதை விட, என்ன மாதிரி கதையை எடுத்திருக்கிறார்கள் என்பது தான் முக்கியம். நானும் இப்படம் பார்க்க ஆவலாக காத்துக்கொண்டிருக்கிறேன். இப்போதெல்லாம் ஆடியன்ஸ் ரிவ்யூ வந்த பிறகு நன்றாக இருந்தால், படத்திற்கு போகலாம் என நினைக்க ஆரம்பித்து விட்டார்கள்.
தயாரிப்பாளர் சையத் தமீன் பேசியதாவது.., இங்கு என்னை வாழ்த்த வந்துள்ள அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி. வஞ்சிக்கப்பட்ட தோழிக்கு நீதி வேண்டி போராடும் பெண்ணின் கதை தான் இது. இது உண்மையில் நடந்த கதை. இந்த கதையில் வரும் வில்லனுக்கு, 2017 ஆம் ஆண்டு பூந்தமல்லி கோர்டில் தண்டனை வழங்கப்பட்டது, உண்மையில் நடந்ததை வைத்து தான் படம் எடுக்கப்பட்டுள்ளது. தயாரிப்பாளர் என்பவர் எல்லா பிஸினஸ் போல பொருளை தயாரித்து சந்தைக்கு கொண்டு வருகிறார், ஆனால் இடையில் உள்ளவர்கள் தான் சம்பாதிக்கிறார்கள், தயாரிப்பாளருக்கு இறுதியில் தான் என்ன கிடைக்கிறது என்பதே தெரிய வருகிறது. இந்த நிலை மாற வேண்டும். படம் பார்த்து உங்கள் ஆதரவைத் தந்து புதிய தயாரிப்பாளரை வாழ வையுங்கள். அனைவருக்கும் நன்றி
இயக்குநர் சந்தோஷ் ரயான் பேசியதாவது.., இந்த படத்தை தயாரித்த சையத் தமீன் அவர்களுக்கு நன்றி. இப்படத்திற்கு முழு ஆதரவைத் தந்த லால் தேவ் சகாயம் சாருக்கு நன்றி. சரவணன் மசூத் இருவருக்கும் நன்றி. ஆஷிகா அசோகன் மிக முக்கியமான பாத்திரத்தில் அருமையாக நடித்துள்ளார். இன்னொரு ஹீரோயின் ஐஸ்வர்யா எப்போது சார் படம் வரும் எனக்கேட்டுக் கொண்டே இருந்தார். சூப்பராக நடித்துள்ளார். வில்லன் நடிகர் சினான் மிக நன்றாக நடித்துள்ளார். கௌதம் எனக்காக பல கஷ்டங்களை பொறுத்துக்கொண்டு அருமையான இசையைத் தந்துள்ளார். சந்தீப் மிக நன்றாக எடிட் செய்துள்ளார். ஜஸ்டிஸ் ஃபார் ஜெனி, இது நம் நாட்டில் தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருக்கிறது. இது நம் தனிமனித ஒழுக்கத்தால் தான் மாறும், அதை இந்தப்படம் அழுத்தமாக பேசும். பெண் பிள்ளைகள் பாதுகாப்பு பற்றி பேசியுள்ளோம். எங்களைப் போன்ற புதியவர்களின் முயற்சிக்கு ஆதரவு தந்து தியேட்டரில் படம் பாருங்கள் நன்றி.

