கடந்த 2017ஆம் ஆண்டு வெளியாகி அதன் நகைச்சுவை கலந்த கதைக்களத்திற்காக வெற்றி பெற்ற ‘மரகத நாணயம்’ திரைப்படத்தின் தொடர்ச்சியாக உருவாகும் ‘மரகத நாணயம் 2’ திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது நடிகர் கார்த்தி பலகையை அடித்து துவக்கி வைத்தார். நடிகர் ஆர்யா கேமராவை முடிக்கி வைத்தார். இயக்குநர் வெங்கட்பிரபு ‘கேரமா ரோலிங், ஆக்ஷன்’ என சொல்லி படப்பிடிப்பை துவக்கி வைத்தார். ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரியுடன் நட்பில் உள்ள பல முக்கிய திரைபிரபலங்களும் இந்த பூஜையில் கலந்து கொண்டு தங்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர் இந்தப் படத்தில் ஆதியும் பிரியா பவானி சங்கரும் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் சத்யராஜ், நிக்கி கல்ராணி பினிசெட்டி, முனீஷ்காந்த், ஆனந்தராஜ், டேனி, அருண்ராஜா காமராஜ் மற்றும் முருகானந்தம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.*******
*தொழில்நுட்பக்குழு விவரம்:* இயக்கம் – ஏஆர்கே சரவன் , இசை – திபு நினன் தாமஸ், ஒளிப்பதிவு – பி.வி. சங்கர், கலை இயக்கம் – என்.கே. ராகுல், படத்தொகுப்பு – திருமலை ராஜன் ஆர், வசனம் – ராஜேஷ் கண்ணன், சண்டைப் பயிற்சி – பி.சி. ஸ்டண்ட்ஸ், தயாரிப்பு நிர்வாகி – எஸ்.எஸ். ஸ்ரீதர், உடை வடிவமைப்பு – ஏ. கீர்த்திவாசன், நடன அமைப்பு – ரகு தாபா, எக்ஸிக்யூட்டிவ் தயாரிப்பாளர் – மோகன் பி, தயாரிப்பு மேலாளர் – எஸ். பிரபாகர், ஒலி வடிவமைப்பு – சிங்க் சினிமா, ஒலி கலவை – உதயகுமார், விஎஃப்எக்ஸ் – ரெசோல் FX, விஎஃப்எக்ஸ் மேற்பார்வையாளர் – கிரண் ராகவன், மார்க்கெட்டிங் & புரமோஷன் – DEC, மக்கள் தொடர்பு– சுரேஷ் சந்திரா, அப்துல் A. நாசர், பப்ளிசிட்டி டிசைன் – வியாகி, சட்ட ஆலோசகர் – எம்.வி. பாஸ்கர்.

