விஜய் சேதுபதி நடித்துள்ள முத்து என்கிற காட்டான் வெப் சீரிஸின் முன்னோட்டம் சமீபத்தில் வெளியாகி சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ஜியோ ஸ்டார் வெளியீடாக உருவாகியுள்ள இந்த சீரிஸ் விரைவில் இணைய தளத்தில் வெளியாக உள்ளது. டீசரில் , மூன்று வருடமாக புகார் ஏதும் வராததால் மூடப்படும் தருவாயில் இருக்கும் ஒரு சிறிய கிராமத்தின் காவல் நிலையம், ஒரு மனிதனின் வெட்டப்பட்ட தலையால் உயிர் பெறுகிறது. “முத்துவின் தலை’. யார் இந்த முத்து? அவனது உடல் எங்கே? என்ற தேடல் ஏராளமான ஆச்சரியங்களும் மர்மங்களும் நிறைந்ததாக உள்ளது. மர்மம் கலந்த காட்சிகள் மற்றும் வித்தியாசமான கதாபாத்திர வடிவமைப்பு என பார்வையாளர்களின் கவனத்தை வலுவாக ஈர்க்கின்றது. குறிப்பாக, விஜய் சேதுபதி தலை புதிய தோற்றத்தில் காட்சியளிப்பது ரசிகர்களிடையே ஆவலை அதிகரித்துள்ளது. இந்த சீரிஸின் கதை எதை மையமாகக் கொண்டது என்பது குறித்து முழு விவரம் வெளியாகாதபோதிலும், டீசர் மிகப் புதுமையான அனுபவத்தை வழங்குகிறது.********
விஜய் சேதுபதி புரொடக்ஷன்ஸ் சார்பில் ஜியோ ஹாட்ஸ்டார் ஒரிஜினல்ஸ் படைப்பாக, இயக்குநர் மணிகண்டன் தலைமையில் உருவாகியுள்ள இந்த சீரிஸை, B. அஜித் குமார், M. மணிகண்டன் இணைந்து இயக்கியுள்ளனர். இந்த சீரிஸ் வரும் 2026 மார்ச் 27 ஆம் தேதி ஜியோஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகிறது.
தொழில் நுட்ப குழு தயாரிப்பு – ஜியோ ஹாட்ஸ்டார், விஜய் சேதுபதி புரொடக்ஷன்ஸ் இயக்குநர்கள் – B. அஜித் குமார், M. மணிகண்டன் கதை / திரைக்கதை – M. மணிகண்டன், B.அஜித் குமார், L.A. ராஜ்குமார் ஒளிப்பதிவு – N. சண்முக சுந்தரம், மது நீலகண்டன் எடிட்டர் – B. அஜித் குமார் இசையமைப்பாளர் – ராஜேஷ் முருகேசன் கலை இயக்குநர் – ஜாக்கி, சாபு மோகன் மக்கள் தொடர்பு – யுவராஜ்

