ஆர்.ரமேஷ்பாபு தயாரிப்பில் சுரேஷ் சங்கய்யா இயக்கத்தில் யோகிபாபு, லவ்லின், ரேச்சல், ஜார்ஜ் மரியான், ராமசிருஷணன் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “கெணத்தை காணோம்”. ராமநாதபுரம் மாவட்டத்தில் தண்ணீர் பஞ்சம் ஏற்படுகிறது.அதனால் அம்மாவட்டதிலுள்ள கோடங்கி பட்டி கிராமத்தில் குடிதண்ணீருக்காக கிணறு தோண்டுகிறார்கள். பாதி கிணறு வரை நிலத்தை தோண்டியதும் ஒரு டைனோசரின் எழும்பு கூடு கிடைக்கிறது. அதனால் அந்த நிலப்பகுதியை தொல்லியல்துறையினர் கைப்பற்றுகிறார்கள். அந்த கிராமமக்களுக்கு குடிதண்ணீர் கிடைத்ததா? டைனோசர் எழும்புக்கூடின் பின்னணி என்ன? என்பதை விளக்குகின்ற படம்தான் “கெணத்தை காணோம்”. கதைநாயகனாக யோகிபாபு நடித்துள்ள இப்படத்தை சமூக அக்கறையுடன் இயக்கியுள்ளார் சுரேஷ் சங்கய்யா. நகைச்சுவை நடிகரான யோகிபாவை கதாநாயகனாக்கியதால் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. இருந்தாலும் தனது ரசிகர்களுக்காக ஒன்றிரெண்டு காட்சிகளில் ஆங்காங்கே நகைச்சுவை வசனத்தை தெளித்திருக்கிறார். படம் முழுக்க ஒரு வித பரபரப்புடன் செல்கிறது. இது யோகிபாபுவுக்குறிய படமாக தெரியவில்லை. கதாநாயகியாக நடித்திருக்கும் லவ்லின் விரல்விட்டு எண்ணுகிற காட்சிகளில் மட்டும் பார்வையாளர்களின் மனதில் தேங்கி நிற்கிறார். துணை கதாபாத்திர நடிகர்களின் இயல்பான நடிப்பாலும் பேசும் எதார்த்தமான வசன உச்சரிப்பால் மட்டுமே படத்தை ரசிக்க முடிகிறது. உச்சக்கட்ட காட்சியில் மட்டும் கிராம மக்களின் வாழ்வியலை தத்ரூபமாக படமாக்கியிருக்கிறார்கள். அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் முகமூடி இல்லாத உண்மையான தோற்றத்தை நாட்டு மக்களுக்கு இப்படத்தின் மூலம் காட்டியிருக்கிறார் இயக்குநர் சுரேஷ் சங்கைய்யா.
“கெணத்தை காணோம்”திரைப்பட விமர்சனம்
