பெங்களூரில் அமுதசுரபி டாக்டர் எம்.ஜி.ஆர். உதவும் அறக்கட்டளை சார்பில் “கொடைவள்ளல் எம்.ஜி.ஆர். கொள்கை திருவிழா 2026” நிகழ்ச்சியை அறக்கட்டளையின் தலைவர் பழநி ஏற்பாடு செய்திருந்தார். இத்திருவிழாவில் மலேசியா பாடகர்கள் ஆ.எஸ்.ரவீந்திரன் மற்றும் எஸ்.பி.மதியழகன் ஆகியோர் கலந்து கொண்டு எம்.ஜி.ஆர்.நடித்த திரைப்பட பாடல்களை பாடினார்கள். இவர்களுடன் சென்னை புகழ் கானம் ராஜாவும் பாடினார்.

ஆர்.எஸ்.ரவீந்திர்ன் தனது முதல் பாடலாக ரகசிய போலீஸ் 115 திரைப்படத்திலிருந்து “கண்ணில் தெரிகின்ற வானம் கைகளில் வராதோ” என்ற பாடலை ஆடலுடன் பாடினார். அவருடன் சேர்ந்து பிரபல பின்னணி பாடகி ஜிக்கியின் மகள் ஹேமா பாடினார். இருவரும் பாடலில் கரைந்து ரசித்துப் பாடியது பார்வையாளர்களை மிகவும் கவர்ந்தது. குறிப்பாக ஆர்.எஸ்.ரவீந்திர்ன் தன்னை மறந்து பாடலில் உருகிப்போய் ஆடியபடியே பாடினார். இதை பாடகி ஹேமா ரசித்து அவருடன் ஆடியே பாடினார். அடுத்த பாடலாக “சந்தரோதயம் ஒரு பெண்ணானதோ செந்தாமரை இரு கண்ணானதோ” என்ற பாடலை பெங்களூர் பாடகி ராஜேஸ்வரியுடன் சேர்ந்து பாடினார். ராஜேஸ்வரியும் ஆர்.எஸ்.ரவீந்திரனின் பாடலுக்கும் ஆடலுக்கும் ஈடுகொடுத்து ஆடிப் பாடியது எம்.ஜி.ஆரின் ரசிகர்களுக்கு உற்சாகத்தைக் கொடுத்தது. கூட்டத்தில் சில ரசிகர்களும் வாயசைத்து ஆடினார்கள். அடுத்ததாக “பாடினால் ஒரு பாட்டு பால் நிலாவைக் கேட்டு” என்ற பாடலை சென்னை புகழ் கானம் ராஜாவும் ஆர்.எஸ்.ரவீந்தரனும் சேர்ந்து பாடினார்கள். பாடி முடித்ததும் “ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்” என்ற பாடலை ஆர்.எஸ்.ரவீந்திரனுடன் சென்னையை சேர்ந்த பாடகி ஜெயஶ்ரீ பாடினார் அப்போது “ராஜாவின் பார்வை ஜெயஶ்ரீயின் பக்கம்” என்று குறும்பாக மாற்றி பாடினார் ஆர்.எஸ்.ரவீந்திர்ன். இதைக்கேட்ட ரசிகர்களின் சிரிப்பலை அரங்கத்தை அதிர வைத்தது. அடுத்ததாக நீயேதான் எனக்கு வழிகாட்டி” என்ற பாடலை ஆர்.எஸ்.ரவீந்திரனுடன் சேர்ந்து பெங்களூர் பாடகி ராஜேஸ்வரி மனமுறுகி பாடினார். நாளை நமதே என்ற படத்திலிருந்து “நாளை நமதே” என்ற பாடலை சென்னை புகழ் காணம் ராஜா, ஆர்.எஸ்.ரவீந்திரன், எஸ்.பி. மதியழகன் ஆகிய மூவரும் சேர்ந்து பாடி எம்.ஜி.ஆர்.ரசிகர்களை மகிழ்வித்தனர்.

எஸ்.பி.மதியழகன் “குமரிப்பெண்ணின் உள்ளத்திலே குடியிருக்க நான் வர வேண்டும்” என்ற பாடலை பாடி “குடியிறுக்க நான் வருவதென்றால் வாடகை என்ன தர வேண்டும்” என்று தன்னோடு பாடவந்த ஜெயஶ்ரீயிடம் கேட்டு ஒரு ஆட்டமும் போட்டு அசத்திவிட்டாரே பார்க்கலாம், பார்வையாளர்கள் கையொலி தட்டி ஆரவாரம் செய்துவிட்டார்கள். மேடையில் அதிகம் பாடியது ரவீந்திரனும் கானம் ராஜாவும் என்றால் அதிக ஆடியது மதியழகன்தான். குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் படகோட்டியில் “நான் ஒரு குழந்தை நீ ஒரு குழந்தை ஒருவர் மடியிலே ஒருவரடி” என்று சரோஜா தேவியை நேரில் பார்த்து பாடுவதுபோல் பாடி ஆடி மிகைத்துவிட்டார் எஸ்.பி.மதியழகன். நிகழ்ச்சியின் துவக்கத்தில் சென்னை புகழ் கானம் ராஜா “காஷ்மீர் பியூட்டிபுல் காஷ்மீர்”, “ஆடிவா ஆடிவா ஆடப்பிறந்தவலே ஆடிவா”. “பொன் எழில் பூத்தது பொதுவானில் வெண்பனி தூவும் நிலவே நில்” ஆகிய பாடல்களைப் பாடி ரசிகர்களை மகிழ்வித்தார். மொத்தத்தில் இந்த நிகழ்வி முலம் ஆர்.எஸ்.ரவீந்திரன், எஸ்.பி.மதியழகன். சென்னை புகழ் கானம் ராஜா மூவரும் எம்.ஜி.ஆர். ரசிகர்களின் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்து விட்டார்கள்.


