ஸ்கை பிக்சர்ஸ் தயாரிப்பில், ஶ்ரீ செந்தில் இயக்கத்தில், பரத், அஜய் கார்த்தி, சங்கீதா, பவானிஶ்ரீ, அபர்ணதி, அனந்த் நாக், பிரகாஷ்ராஜ், கிஷோர் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “காளிதாஸ் 2”. சென்னையிலுள்ள அடுக்குமாடி குடியிறுப்பில் ஒரு வீட்டிலுள்ள குழந்தை காணாமல் போய்விடுகிறது. அந்த குழந்தையை கண்டுபிடித்துதர அக்குழந்தையின் பெற்றோர்கள் காவல்நிலையத்க்தில் புகார் செய்கிறார்கள்.இதன் தொடர்ச்சியாக ஆய்வாளர் பரத் அந்த அடுக்குமாடி குடியிறுப்புக்குச் சென்று ஆய்வு நடத்துகிறார். அதே குடியிறுப்பில் தங்கியிருக்கும் அஜய் கார்த்திக் மீது பரத்துக்கு சந்தேகம் வருகிறது. அவரை விசாரணை செய்யும்போதே காணாமல் போன குழந்தை அழுகிய நிலையில் பிணமாக கிடைக்கிறது. இதுபற்றிய விசாரணை நடந்துகொண்டு இருக்கும்போதே அதே குடியிறுப்பில் வேறு ஒருவரும் கொலை செய்யப்படுகிறார். இதனால் சந்தேகத்தின் பேரில் பிடித்து வைதிருப்பவரை பரத் விட்டுவிட்டு உண்மையான கொலைகாரனை கண்டுபிடிக்க முயற்சிக்கிறார். அந்த கொலைகாரன் யார்? கொலைக்கான காரணம் என்ன என்பதுதான் கதை. கதையின் நாயகனாக நடித்திருக்கும் பரத், காவல் ஆய்வாளரின் காக்கிச் சட்டையில் வந்துபோகிறாரே தவிர, ஆய்வில் உயிரோட்டம் இல்லை. அதற்குக் காரணம் பவானி ஶ்ரீயின் கதாபாத்திரமான துணை ஆணையர் கதாபாத்திரம்தான். இருவருக்குமிடையில் ஒத்துழையாமை விசாரணையில் பரத் பின்னுக்குத் தள்ளப்படுகிறார். உற்சாகமின்றி பரத் நடிக்கும் கதாபாத்திரம் அவரை ரசிகர்களிடமிருந்த்து பிரித்துவிடுகிறது. துணை ஆணையர் என்பதால் பவானி ஶ்ரீயின் அதட்டல் விசாராணை அதிகமுள்ளது. இதில் ஆய்வாளர் பரத் அடங்கிப்போவதை ரசிக்க முடியவில்லை. உச்சக் கட்ட காட்சியில்தான் படத்க்தின் கரு பரிணாம வளர்ச்சி பெறுகிறது. சங்கீதாதான் உச்சக்கட்டகாட்சியின் கதாநாயகியாக தென்படுகிறார். வல்லமை பெற்ற நடிகரான பிரகாஷ்ராஜுவுக்கு முக்கியத்த்குவம் கொடுக்காமல் இரண்டு மூன்று காட்சிகளோடு காணாமல் போய்விட்டார். அந்த கதாபாத்திரத்திற்கு பிரகாஷ் நடித்திருக்க வேண்டாம். உச்சக்கட்டகாட்சியில் மட்டும் பரத் சற்று தலை தூக்குகிறார். பழைய காள்தாஸ் படத்தின் தொடர்ச்சியாக காளிதாஸ் 2 படம் அமையவில்லை. இதில்வேறு மூன்றாம் பாகத்துக்கும் இயக்குநர் பாதைபோடுகிறார். அந்த பாதையிலாவது பரத் கம்பீரத்துடன் காதாநாயகனுக்குறிய தோரணையில் நடைபோட வேண்டும். இசையமைப்பாளர் சாம் தனது வேலையை சரியாக செய்திருக்கிறார். சுரேஷ் பாலாவின் ஒளிப்பதிவு உயிரோட்டமாக உள்ளது.
காளிதாஸ் 2 திரைப்பட விமர்சனம்
