கலிங்கப்பட்டி ஊராட்சி – வீரணாபுரம் கிராமத்தில் வீரசக்தி விநாயகர் ஆலய குடமுழுக்கு விழா – வைகோ பங்கேற்பு

தென்காசி மாவட்டம், திருவேங்கடம் வட்டம், கலிங்கப்பட்டி ஊராட்சி, வீரணாபுரம் கிராமம் முழுவதும் தேவேந்திரகுல வேளாளர் சமூக மக்கள் வாழும் கிராமமாகும். இக்கிராம மக்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, கழகப் பொதுச்செயலாளர் வைகோ தமது சொந்தச் செலவில் ஊரின் மையப் பகுதியில் வீரசக்தி விநாயகர் கோயிலைக் கட்டித் தந்துள்ளார். 27.04.2026) காலை 9 மணி அளவில், இத்திருக்கோயில் குடமுழுக்கு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.

கழகப் பொதுச்செயலாளர் வைகோ  இதில் பங்கேற்று கலசத்தில் நீர் ஊற்றினார். தொடர்ந்து ஊரின் எல்லையில் உள்ள வீரகாளி கோயில் குடமுழுக்கு நிகழ்விலும் பங்கேற்று சாமி தரிசனம் செய்தார். அதனைத் தொடர்ந்து தமது ஏற்பாட்டில் ஊர் மக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்வையும் வைகோ தொடங்கி வைத்தார்.

முன்னதாக வீரணாபுரம் கிராமத்திற்கு வந்த வைகோ அவர்களை மேள தாளங்கள் முழங்க ஆரத்தி எடுத்து ஊர் மக்கள் ஊர்வலமாக அழைத்து வந்தனர். நிகழ்ச்சியில் திமுக தென்காசி வடக்கு மாவட்டச் செயலாளர் ஈ.ராஜா எம்.எல்.ஏ., கழக துணைப் பொதுச்செயலாளர் தி.மு.இராசேந்திரன், சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சங்கை கணேசன், மாவட்டச் செயலாளர்கள் சுதா பாலசுப்பிரமணியன், ஆர்.எஸ்.ரமேஷ், வேல்முருகன், ஒன்றியக் குழுத்  தலைவர் விஜயலட்சுமி கனகராஜ், ஒன்றியச் செயலாளர்கள் சீனிவாசன், ராஜகோபால், திமுக ஒன்றியச் செயலாளர் சேர்மதுரை, ஒன்றியக் குழு உறுப்பினர் அருள்குமார், ஊராட்சி மன்றத் தலைவர் மணிமொழி சந்துரு உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.