தமிழ் திரையுலகில் குடும்பத்தோடு ரசிக்கக்கூடிய படங்களை தொடர்ந்து வழங்கி வரும் இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய நகைச்சுவை படம் “பரிமளா அண்ட் கோ” படத்தின் முதல் பதாகை தற்போது வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. “தலைவன் தலைவி” படத்தின் வெற்றிக்குப் பிறகு, தனது 12வது படைப்பாக, முற்றிலும் புதுமையான களத்தில் இந்த படத்தை இயக்கியுள்ளார் பாண்டிராஜ். ஒவ்வொரு படத்திலும் புதிய முயற்சிகளை மேற்கொள்ளும் அவரது பாணியில் இந்த முறை அதிர்ச்சி மற்றும் நகைச்சுவையை இணைத்து குடும்பங்கள் ரசிக்கும் வகையில் “பரிமளா அண்ட் கோ” உருவாகியுள்ளது. இப்படத்தில் ஜெயராம், ஊர்வசி, சந்தோஷ் சோபன், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, சாண்டி, அனந்திகா சனில்குமார், யோகிபாபு, மிஷ்கின், சிங்கம்புலி மற்றும் பக்ஸ் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.******
இந்த படத்தின் கதை, ஒரு வித்தியாசமான குடும்பத்தைச் சுற்றி நகர்கிறது. அந்த குடும்பத்தில் உள்ள மனிதர்களின் தனித்துவமான குணாதிசயங்கள் மற்றும் அவர்கள் சந்திக்கும் அபூர்வமான சம்பவங்கள் கதையின் மையமாக அமைந்துள்ளன. சென்னை நகரத்தைத் தொடக்கமாகக் கொண்டு கோயம்புத்தூர் மற்றும் பாலக்காடு வரை பயணிக்கும் இந்த கதை, திரில்லர் பாணியிலும் நகைச்சுவை கலந்த காட்சிகளாலும் பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், தற்போது இறுதிக்கட்ட போஸ்ட் புரடக்ஷன் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. மிக விரைவில் இப்படத்தை திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
தொழில் நுட்ப குழு விபரம் தயாரிப்பு : Lyca Productions, Tamilkumaran Productions Pvt Ltd, Pasanga Productions கதை, திரைக்கதை, இயக்கம் : பாண்டிராஜ் ஒளிப்பதிவு : ஜார்ஜ் C. வில்லியம்ஸ் ISC இசை : Foxn எடிட்டர் : பிரதீப் E. ராகவ் கலை இயக்குனர் : T. ராமலிங்கம் ஸ்டண்ட் : கலாய் கிங்ஸன் நடன அமைப்பு : சாண்டி, பாபா பாஸ்கர் மியூசிக் சூப்பர்வைசர் : சந்தோஷ் குமார் ஆடை வடிவமைப்பாளர் : பூர்ணிமா ராமசாமி ஆடை : K. நடராஜ் ஒலிப்பதிவு : M.R. ராஜாகிருஷ்ணன் சவுண்ட் எஃபெக்ட்ஸ் : ஷ்ரேயாஸ் பத், அருண் பிரசாத் VFX தயாரிப்பு : B.R. வெங்கடேஷ் DI : Knack Studios கலரிஸ்ட் : பிரசாத் சோமசேகர் விளம்பர வடிவமைப்பு : ADFX Studio மக்கள் தொடர்பு : சதீஷ் (AIM) தயாரிப்பு மேற்பார்வை : ராமதாஸ் & விஜய் C சப்டைட்டில்ஸ் : ரேக்ஸ்

