விரைவில் வெளியாகும் ‘அரூபி’ திரைப்படம்

மலையாளத்தில் உருவாகியுள்ள ‘அரூபி’ திரைப்படத்தின் தமிழ் பதிப்பிற்கான காணொளி மற்றும் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. மர்மம் நிறைந்த  அம்சங்கள் இப்படத்தின் டிரெய்லர், ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. “சில ரகசியங்கள் ஒருபோதும் மறைந்தே இருக்காது…” என்ற வரியுடன் தொடங்கும் காணொளி, பல்வேறு மர்மங்கள் மற்றும் எதிர்பாராத திருப்பங்களால் நிறைந்த கதைக்களத்தை முன்னிறுத்துகிறது. விறுவிறுப்பான காட்சிகள், பின்னணி இசை மற்றும் திகில் கலந்த திரைக்கதை ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இசை மற்றும் காணொளி வெள்ளோட்டத்துக்கு  பின் படக்குழு படம் குறித்த சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்து கொண்டனர்.  இப்படம் விரைவில் திரைக்கு வருகிறது********

இந்நிகழ்வினில் இயக்குநர் அபிலாஷ் வாரியர் பேசியதாவது.., “முதலில் அனைவருக்கும் நன்றி. எங்களுக்கு ஆதரவு அளிப்பதற்கு மனமார்ந்த நன்றி. இந்தப் படம் மலையாளம் மட்டுமல்ல, எல்லா மொழி ரசிகர்களும் ரசிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. வித்தியாசமான ஜானரில் உருவாகியுள்ள இந்தப் படத்திற்காக படப்பிடிப்பின்போதே நிறைய உழைத்திருக்கிறோம்.

படத்தின் புரமோஷன் பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்தப் படத்தின் மிகப்பெரிய பலம் அதன் தொழில்நுட்பக் குழு. பின்னணி இசையமைப்பாளர் கோபி சுந்தர் ., ஒளிப்பதிவாளர் ரோபி வர்கீஸ் ராஜ், படத்தொகுப்பாளர் கிஷோர் மோகன் உள்ளிட்ட அனுபவமிக்க தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் சிறப்பாக பணியாற்றியுள்ளனர்.

மீதியை நீங்கள் திரையரங்கில் பார்த்து முடிவு செய்யுங்கள். படம் உங்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும் என்று நம்புகிறோம். அனைவருக்கும் மீண்டும் நன்றி.”

தயாரிப்பாளர் பிரதீப் ராஜ் பேசியதாவது: “இந்த நிகழ்ச்சிக்கு வருகை தந்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி. இன்று திரைப்படம் என்பது ஒரு பொழுதுபோக்கு மட்டுமல்ல, ஒவ்வொருவரின் வாழ்க்கையின் ஒரு அங்கமாக மாறிவிட்டது. மகிழ்ச்சியாக இருந்தாலும், சோகமாக இருந்தாலும், தனிமையில் இருந்தாலும், மன அழுத்தத்தில் இருந்தாலும், மக்கள் ஒரு திரைப்படத்தைப் பார்க்கிறார்கள். திரைப்படம் பார்க்க இனி எந்தவொரு விசேஷ நாளும் தேவையில்லை.

சமீபத்தில் கேரள அரசு திரைப்படத் துறையை ஒரு தொழில்துறையாக அறிவித்துள்ளது. அதனால் இன்று நாங்கள் அனைவரும் திரைப்படம் என்ற தொழிலில் ஈடுபட்டு வருகிறோம் என்பதில் பெருமை கொள்கிறேன். இந்த மேடையில் நின்று சினிமாவை கொண்டாடுவதில் மகிழ்ச்சி. இந்த சினிமாவின் ஒரு பகுதியாக இருப்பதற்கும், உங்களுடன் இந்த தருணத்தை பகிர்ந்து கொள்வதற்கும் சந்தோஷமாக இருக்கிறது. இந்த வாய்ப்புக்காக என் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் நன்றி.